வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி

அரசு ஊழியர்கள், வீடு கட்டுவதற்காக வாங்கிய முன்பணத்தை, அரசுக்கு மொத்தமாக திருப்பி செலுத்த வசதியாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள், சொந்தமாக வீடு கட்ட, வங்கிகளில் கடன் பெறுவதற்கு பதில், அரசே குறிப்பிட்ட தொகையை, முன்பணமாக வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி,40 லட்சம் ரூபாய் வரை, முன்பணமாக பெற முடியும்.

இத்தொகை, மாத தவணையாக, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இதற்கு, குறைந்த பட்ச வட்டியும் விதிக்கப் படும்.தவணை காலம் முடிவதற்குள், அசல் தொகையை, மொத்தமாக செலுத்த விரும்பும், அரசு ஊழியர்களுக்கு, சரியான விதிமுறைகள் இல்லை. அசல் தொகையை, மொத்தமாக செலுத்த தேவையான நிதி ஆதாரம் பற்றி, அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, புதிய விதிமுறைகளை, அரசு பிறப்பித்துள்ளது.

வீட்டுக்கடன் முன் பணத்தை, முன்னதா கவே திருப்பி செலுத்த விரும்புவோர், அதற்கான நிதி, எவ்வழியில் திரட்டப்பட்டது என்பதற் கான ஆதாரத்துடன், தங்கள் துறையின் மேலதிகாரிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்

இந்த விண்ணப்பம், அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, அந்த மேலதிகாரி ஆராய வேண்டும்துறை மேலதிகாரியின் அனுமதிக்கு பின், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், அசல் தொகையை, எந்த அதிகாரியிடம் செலுத்த வேண்டுமோ, அவரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 அப்போது, துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ள விபரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும், தலைமை கணக்காயருக்கும் தெரிவிக்க வேண்டும். இதன் பிறகே, பணத்தை செலுத்த முடியும்

பணத்தை செலுத்தியதும், அதுகுறித்த ஆவணங்களை, தலைமைகணக்காயருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Interest rate எவ்வளவு தெரிந்தால் பகிரவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி