பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள்.

வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டதால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர்  செங்கோட்டையன் கூறினார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள பழமையான யாழ்பாண நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்களும், அங்குள்ள 10 இந்து கல்வி நிறுவனங்களுக்கு 5,000 நூல்களும், இலங்கை கிழக்கு,  மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு 50,000 நூல்களும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி  உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள்  நியமிக்கப்படும்போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.  தற்போது, வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82,000 பேருக்கு மீண்டும் தேர்வு  நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை செப்டம்பர் மாதம்  நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டு வந்தனர். இந்த முறை இந்த ஆண்டு மட்டும் நடைமுறையில் இருக்கும். அடுத்த ஆண்டு முதல் அவர்களும், ஜூன் மாதமே  தேர்வெழுத முடியும். அதேநேரம் 11ம் வகுப்புக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்புக்கு செல்ல முடியும்.  மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக  ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர்  மயமாக்கப்படும். அந்த பணி முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணினி ஆசிரியர் பணியிடம் ரூ.7500 சம்பளத்தில்  நிரப்பப்படும். கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

17 comments:

  1. Next tet 2018 nadathaporangla ? Illa tet pass panavangaluku main exam nadathaporangla? Pls reply sir

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இப்படியே சொல்லிகிட்டே இருங்க எதையும் செயலில் காட்டாதீங்க

    ReplyDelete
  4. As per Ugc rule to be contact every year tet exam..so 2018 tet?????? na kandipa case poduven

    ReplyDelete
    Replies
    1. nothing will happen example local election case 18 mla case

      Delete
  5. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை

    ReplyDelete
    Replies
    1. All cased chemistry candidates Trb kku ph pannitteee irunga......illaina kandukka mattanga..????so pressure koduthutteee irunga...

      Delete
  6. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
    Replies
    1. Nanba u send to cm cell for request so obtain about information

      Delete
  7. Every thing is only in words nothing is in action. So he is called rumour minister

    ReplyDelete
  8. Exam TET is Pre plan panni pannunga Students Salary kooda veanam sollara alauvuku Vantanga Paavam Namma Tamilnadu la irukom So Namma pillakalaiyea ipadi Padikka vachu Kasta paduthrom Paavam atha Other country Ku Namma Tamilnadu Neriya pooranga So Govt Is Pre plan Must Must Thank

    ReplyDelete
  9. Sengotaiyan oru manusane illa padikaathavanuku pidichavanga feel eappadi purium oru mudiva eaduka mudiyaatha van oru amaichar? Waste



    ReplyDelete
  10. ஒரே குழப்பமா இருக்கு நாராயணா

    ReplyDelete
  11. இதில் என்ன குழப்பம் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தால் அரசு என்ன செய்யும்

    ReplyDelete
    Replies
    1. Manthiri mattum uar kalvi palli kalvi enru pottikkuvangalama???

      Delete
  12. Tet qualified student must write 10 competition exam for next 10 years then only posting.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி