தாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்:CEO உத்தரவு - ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

தாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்:CEO உத்தரவு - ஆசிரியர்கள் அதிர்ச்சி!


சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ளவர் கணேஷ்மூர்த்தி, இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், கரூர் மாவட்டத்திலிருந்து, மாறுதலில் சேலம்வந்தார்.

பணியில் சேர்ந்தது முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.ஆய்வின் போது காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடுவதோடு, அடுத்தநாளே சம்பளம் பிடித்தம் செய்ததற்கான ஆணையை வழங்கி விடுகிறார். மேலும் காலை, 9:15 மணிக்குள், பள்ளியின் வருகை பதிவை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, '17 ஏ' மெமோ வழங்குகிறார். இதனால், சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 comments:

  1. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.அப்படியே மதுரை மேலூர் கல்வி மாவட்டத்திற்கு வாங்க Sir.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  3. Oru transfer counselling olunga nadatha mudiyala lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum Kanyakumari district vacancy not displayed yr by yr one or two vacancy varum athey kooda kattale ellam lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum (not coming time to school punish ok )oru transfer counselling olunga lancham vangama poda all vacancy display panna mudiyuma velai seiyamal erunthal velail erunthu thookkunga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி