Flash News: உயர்கல்வி பயில 11ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

Flash News: உயர்கல்வி பயில 11ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.

600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

35 comments:

  1. குழப்பாதீர்கள்,உண்மையைக் கூறுங்கள்.

    ReplyDelete
  2. +1 யாரும் நடத்த வேண்டாம்.படிக்க வேண்டாம்..+2 இரண்டு ஆண்டுகள் நடத்துங்கள் என்கிறார் கல்வி அமைச்சர்..இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் மாணவர்கள் எதிர்காலத்துக்கு பயன்படாது..உதயச்சந்திரன் அய்யாவின் நல்ல திட்டத்தை நாசமக்கும் கல்வி அமைச்சர்..

    ReplyDelete
  3. 11 பாஸ் ஆகுமா வேண்டாமா?

    ReplyDelete
  4. கல்வித்துறையில் ஸ்திரத்தன்மை வேண்டும் மா க அமைச்சரே

    ReplyDelete
  5. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு நன்றி....
    by
    அண்ணனின் விழுதுகள்..

    ReplyDelete
  6. ipa +1 +2la pass Mark kozhamba arambicha than avan tet varai edhu pass marknu theriyama kozhamba Vasathiya irukum...

    ReplyDelete
  7. Thanks a lot for your great decision

    ReplyDelete
  8. அடுத்த அறிவிப்பு விரைவில் உங்களிடமிருந்து எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 11 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு ரத்து இது இந்த கல்வி ஆஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை சீக்கிமாகக் கூறுங்கள் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களே...

    ReplyDelete
  9. Maanavargalai kulappuvathe ivargalin velaiya pochu

    ReplyDelete
    Replies
    1. மாணவர்களை மட்டுமா ? ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் நம்மளயும் அப்படி தானே வச்சிருக்கானுவ

      Delete
  10. Athukku 11 th a thookidalamaee...atleast 11 kku 30% ,12 kku 70% convert panninalum parava illa...ippadi sonnal pazhaibadi 11 th a kandukkavaee mattununga( pprivate scls)..nalla vevarama seyalpaduranga, corporate kku...

    ReplyDelete
  11. 11th standard kastappattu padicha thellam ..... Ithu therinja.... Ithunala private schoolla 11th padatha kammiya athavathu pass aagura alavukku nadathittu.. +2padatha nalla nadathuvang... Appa oruopeachu ippa oru peachu yenna aniyayam

    ReplyDelete
  12. +1 syllabus INI teach pannamatanga. +2 syllabus two years teach pannuvanga.Kalvi poiduchi.udaiyachandiren sir unga hardwork zero.next enna nadakkumo? Iyago???

    ReplyDelete
  13. Very good decision bcoz my son depressed about his 11th marks he couldn’t concentrate his 12th std studies also
    This announcement makes him happy and boosting up him

    ReplyDelete
  14. Mikka nandri...manavargalin methu ulla baaram thangalal kuraiyum...manavargalin kashtangalai purinthu konda amaicharay vazhga🙏🙏

    ReplyDelete
  15. Mika nandri... nega nalla irupinga🙏

    ReplyDelete
  16. இன்று தமிழக அரசின் அறிவிக்கை
    தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் ஆகியோரின் எதிர்காலத்தை அடியோடு அழிக்கும் வகையில் வெளியாகியுள்ளது.
    கடந்த நாற்பது ஆண்டுகளாக பதினோராம் வகுப்புக்கு தமிழ்நாட்டில் மட்டும் அரசு பொதுத்தேர்வு இல்லாமலிருந்தது.
    அருகில் அனைத்து மாநிலங்களிலும் பதினோராம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுமுறையும் அந்தத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுடன் சேர்க்கப்பட்டு அவ்விரண்டின் சராசரி யே கல்லூரிகளில் நுழைவதற்கான மதிப்பெண்ணாகக் கருதப்படும்.
    அது போல தமிழக அரசும் கடந்த ஆண்டு இரண்டு வகுப்பகளுக்கும் அரசுப் பொதுத் தேர்வென அறிவித்தது.உண்மையிலேயே கல்வி மீது அக்கரையுள்ளவர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    ஏனெனில் கடந்த நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே பதினோராம் வகுப்புப் பாடத்தை நடத்தினர். பெற்றோர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் எந்த ஒரு தனியார் பள்ளியும் அந்தவகுப்புக்குரிய பாடங்களை நடத்தாமல் சில கேடுகெட்ட கல்வித்துறை அதிகாரிகளை தன் அடிமைகளாக்கிக்கொண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குரிய பாடங்களை நடத்தினர். அதனால் என்ன அது மாணவர்களுக்கு நல்லதுதானே என நீங்கள் கேட்கலாம்.

    அங்குதானிருக்கிறது விசயம்.

    அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதித்தேர்வுப் பாடத்தை ஓராண்டு மட்டுமே படிக்க அனுமதிக்கப்படும் அதே வேளையில் தமிழகப் பெற்றோர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கும்
    தனியார் பள்ளிகளோ அம்மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டுகள் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

    அடுத்து வாருங்கள் இரண்டாண்டுகள் ஒரு பாடத்தை படிக்கும் மாணவன் அதிக மதிப்பெண்கள் எடுப்பானா? அல்லது ஓராண்டு மட்டுமே படிக்கும் அரசுப் பள்ளி மாணவன் அதிக மதிப்பெண் எடுப்பானா?

    சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும் இதற்கான விடை

    இப்போது கூறுங்கள். பெற்றோர்கள் எதை விரும்புவர்?
    அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தரக்கூடிய பள்ளிகளான தனியார் பள்ளிகளைத்தான் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.
    இந்த ஒன்றுதான்கடந்த நாற்பது ஆண்டுகளில் எண்ணிலடங்கா தனியார் பள்ளிகள் தோன்றியதற்கானக் காரணம் .

    தனியார் பள்ளிகள் கொழுத்துக்கொண்டு செல்லும் வேளையில் அரசுப்பள்ளிகள் இளைத்துப் போயின.

    சென்ற ஆண்டு பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முடிவுகள் வெளிவந்ததும் வெலவெலத்துப்போனது தனியார் பள்ளிகள்.அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெற்றனர்.

    இங்குதான் தனியார் பள்ளிகள் யோசிக்கத் தொடங்கின. இப்படியேப் போனால் நான்கைந்து ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் தொடர்ந்து எடுப்பார்கள்.
    பிறகு நமக்கான மாணவர்கள் குறைந்து போவார்கள். நாம் வியாபாரம் செல்லாததாகிவிடும் என உணர்ந்தனர்.

    தனியார்பள்ளிகளுக்கு கூற்றுவனாக இருந்த ஒரு அதிகாரி அனைத்து வியாபாரிகளுக்கும் இடைஞ்சலாகத் தெரிந்தார்.மாற்றப்பட்டார்.

    இப்போது இந்த அறிவிக்கை வெளியாகியுள்ளது. பூனை வெளியேறிவிட்டது.

    அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் பாவம்.இனி அவர்களுக்கான வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது.

    இலவசக் கல்விப் பயிலும் தாய் மொழிக்கல்வி பயிலும் அவர்கள் மீண்டும் கைவிடப்பட்டவர்களாயினர்.

    ஒன்றும் அறியாரடி ஊமைச்சனங்களடி.

    அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் நிலைமை இதை விடப் பாவம்.

    அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நம்பி வாக்களிக்கிறார்கள். இனிமேல் அதுமட்டுமே அவர்களால் செய்யமுடியும்.

    ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைவதற்குத்தான் நம் பெரியோர்கள் பாடுபட்டனர். ஆனால் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட நம்பிக்கையொளி இன்று அணைக்கப்பட்டுவிட்டது.

    என்றுமே ஏழைகளுக்கானவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்.
    அந்த ஒரே நம்பிக்கையில் தற்போது கனத்த இதயத்துடன். என் விரல்கள் ஓய்வெடுக்கட்டும்.

    ReplyDelete
  17. முன்னால் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்திரு.உதயசந்திரன் அவர்கள் வகுத்தளித்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11 & 12-ம் வகுப்பு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பும் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது...
    11-ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள அவ்வளவு அரிய பெரிய தகவல்களும் அதில் கையாளப்பட்டுள்ள புதிய முறைகளும் கிடப்பில் போடப்படும்..
    11-ம் வகுப்பு மாணவர்கள் இனி மிக அருமையாக படித்து பொதுத்தேர்வை எழுதுவர்...நன்றி...

    ReplyDelete
  18. New book changing use ellamal poga pothu.

    ReplyDelete
  19. இந்த அரசியல்வாதிங்க நம்ம உயிரை எடுக்காம விட மாட்டாங்க பாேல...

    ReplyDelete
  20. இந்த அரசியல்வாதிங்க நம்ம உயிரை எடுக்காம விட மாட்டாங்க பாேல...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி