Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசுதிட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும்நோக்கம் அரசுக்கு இல்லை.

7 comments:

  1. மக்கள் வரிப்பணத்தை காப்பாற்றுங்கள்

    ReplyDelete
  2. திறக்க வேண்டிய பள்ளிகளைத்திறந்தும்
    மூடவேண்டிய டாஸ்மாக் கை மூடியும் சிறிய அளவில் நல்லது செய்ய முயன்றால் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சிகளைத் தாண்டி வோட்டுபெறலாம்.....
    தமிழக கல்வித்துறை யை வளர்ச்சி நோக்கி தள்ளமுடியவில்லையென்றாலும் வீழ்ச்சி யை நோக்கி தள்ளிவிடாதீர்கள்...

    ReplyDelete
  3. ஆக வருமாணம் வேண்டாம் செலவு செய்யவேண்டும்

    ReplyDelete
  4. ஆமாம்
    ஆக வருமானம்(உயிரைக் குடிக்கும்) குடியால் கிடைக்கும் வருமானம் வேண்டாம் ....
    மக்களின் ஆட்சி யில் மக்களின் பிரதிநிதியாக உள்ள அரசு வருமானத்தை மக்களின் குடியை அழித்து வருமானம் பெறத் தேவையில்லை.
    செலவேஆனாலும் பரவாயில்லை தனியார் வசூலிக்கும் கொள்ளைக்காரபள்ளிகள் பெறும் டியூசன் வருவாயை அரசே கல்விக்காக வருமானத்தை பெற்றுக் கொண்டு ( பொருளாதார த்தில் கீழ்நிலைையில் உள்ள மக்களுக்கு மட்டும் இலவசமாக) கூட
    தரமான ,சமமான ,ஏற்றத்தாழ்வுகள் அற்ற கல்வியை தரலாம்...
    இதற்கு செலவானாலும் பரவாயில்லை....

    ReplyDelete
  5. இப்படி பரவாயில்லை என்று சொல்லி சொல்லி தான் மூன்றறை லட்சம் கோடி கடன் வந்துவிட்டது

    ReplyDelete
  6. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆண் ஆசிரியருக்கு பணி கிடையாது, ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வேலை பார்க்க பெண் ஆசிரியர்கள் அச்சம்( செய்தி) அரசு பள்ளி ஆசிரியரின் குழந்தைகளே தனியார் பள்ளியில், மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வருவது போல் தெரியவில்லை

    ReplyDelete
  7. Who told u to give 25 % scholarship for private school,we can allot those money for the development of govt school

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி