Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

NET - தேர்வுக்கு ஆதார் தேவையில்லை!


பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தாண்டுக்கான நெட் தேர்வை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., நடத்த உள்ளது. டிச., 9 முதல் 23 வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு செப்., 1ல் துவங்கி, செப்., 30ல் முடிகிறது.இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், அடையாள அட்டை எண் பதிவிட அறிவிப்பு செய்யப்பட்டது. அதில் 'ஆதார் எண்ணை பதிவிடலாம்' என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தேர்வர்களால் பல்வேறு புகார்கள் கூறப்பட்ட நிலையில் 'ஆதார் கட்டாயம் இல்லை' என என்.டி.ஏ., அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் எண், வருமான வரித்துறை பான் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives