PGTRB : அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

PGTRB : அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், ஆர்.பட்டணம் அரசுமேல்நிலைப் பள்ளியில், கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜாஆகியோர் கலந்துகொண்டு, ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட இரு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.


அதன் பின்னர், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 2 வகையிலான புதிய வண்ண பள்ளிச் சீருடைகள் இந்த ஆண்டுக்குள்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுக்குப் பின்னர், கலந்தாய்வு முறையில் அவை நிரப்பப்படும். அதுவரை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்தப் பகுதிகளில் ரூ.7,500 சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் யோகா கற்றுத் தரும் பணிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆழியாறு வாழ்க-வளமுடன் அமைப்பு, சேவைஅடிப்படையில் யோகா கற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி முழுமையாகக் கிடைக்கும் வகையில், அந்த பயிற்றுநர்களுக்கு போக்குவரத்துச் செலவு போன்ற இதர படிகள் பெற்றுத் தருவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1.3 லட்சம் அளவுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 1, 250 பள்ளிகளில் 10 -க்கும் கீழ் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலை மாறி, 285 பள்ளிகளில் சேர்க்கை மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க முன்வந்தால், அதற்கான இடங்களை அரசு அளிக்க ஆவன செய்யும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில், 192 பேரின் மதிப்பெண்களில் தவறு கண்டறியப்பட்டுள்ளது. அதில் எட்டு பேர் மீது கடுமையான நடவடிக்கை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என அவர்தெரிவித்தார்.

22 comments:

  1. எது பன்னாலும் சீக்கிரம் பன்னுங்க 🐯 வருது வந்துட்டே இருக்கு ??????

    ReplyDelete
    Replies
    1. Last year pg chemistry 6 marks given court trbdid not any action still now first at first atha clear panukunga education minister avargala.

      Delete
  2. Any one say PG trb maths Expected vavancy

    ReplyDelete
  3. Sir pls don't expect the no of vacancies, day by day strengthen Ur concepts to face exam. Definitely u will get success. Expected vacancy less than 200 only.

    ReplyDelete
  4. inuma intha ulagam ivaru peacha namputhu..

    ReplyDelete
  5. PG TRB யில் தமிழ் வழியில் 20% பணி ஒதுக்கிடு பெற முதுநிலைப் பாடப்பிரிவுகள் M.Sc கணிதம், தாவரவியல், புவியியல், M .A வரலாறு ,தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிை லைக் கல்வியில் தமிழ் வழியில் படிக்க தொடர்புக்கு: 8122299730

    ReplyDelete
  6. TET தேர்ச்சி பெற்று யோகா முடித்தவர்க்கு பணி வழங்கினால் மாணவர்களுக்கு பயன் மிகுதி

    ReplyDelete
  7. இதே தான் சொல்ற ஆன செய்யமாற்றிக சார்

    ReplyDelete
  8. இதே தான் சொல்ற ஆன செய்யமாற்றிக சார்

    ReplyDelete
  9. பையித்தியம் பிடிக்கும்

    ReplyDelete
  10. first oppotintmentku evalu laks solunka thaliva....

    ReplyDelete
  11. நம்பாதீங்கோ...ஏற்கனவே தற்போது தான் பிடிஏ ல இருந்து தேவையான ஆசிரியர்களை பள்ளிகளில் நிரப்பியுள்ளார்கள்.தேர்தல் சமயத்தில் தான் தேர்வுகளுக்கான அறிவிப்பு வரும் அது வரை இவை ஏமாற்றும் செயல்..

    ReplyDelete
  12. நம்பாதீங்கோ...ஏற்கனவே தற்போது தான் பிடிஏ ல இருந்து தேவையான ஆசிரியர்களை பள்ளிகளில் நிரப்பியுள்ளார்கள்.தேர்தல் சமயத்தில் தான் தேர்வுகளுக்கான அறிவிப்பு வரும் அது வரை இவை ஏமாற்றும் செயல்..

    ReplyDelete
  13. விரைவில்...விரைவில்..என்றுதான் சொல்கிறார் அந்த வார்த்தைகான அர்த்தம் தெறியவில்லையா இவருக்கு

    ReplyDelete
  14. விரைவில் என்ற வார்த்தையை இதோடு 100000000000000000000000000000000000000000000000000000000000000000 முறை சொல்லியாச்சி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி