அரசு பள்ளிகளில் PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

அரசு பள்ளிகளில் PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு


''தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளிமாணவர்களின் சீருடை மாற்றப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், நெமிலி அரசு உயர்நிலை பள்ளியில்,புதிய கட்டட திறப்பு விழா, பூனிமாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி,மேல்நிலை பள்ளியாகவும், ஆதிவராகபுரம் அரசு நடுநிலைப்பள்ளி,உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட விழாவும், நேற்று நடந்தது.

இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:


தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்விஆண்டில்,ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,சீருடை மாற்றம் செய்யப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்களுக்கு அடுத்த மாதம், இலவச சைக்கிள்,'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது. 'நீட்' தேர்வுக்கு, 412மையங்கள் ஏற்படுத்தி, பயிற்சி அளிக்கப்படுகிறது.அடுத்த ஆண்டிற்குள், 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட்வகுப்பறைகள் அமைத்து, மாணவர்களுக்கு, கணினிபயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறையைபோக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள்பெஞ்சமின், பாண்டியராஜன், அரி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்,நரசிம்மன், பலராமன், விஜயகுமார், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்பவணந்தி உட்பட, பலர் பங்கேற்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றநிகழ்ச்சிக்காக, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள தனியார்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு விடுமுறைவிடப்பட்டது. தனியார் பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில்,அரசு பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்

19 comments:

  1. History vacancy thanjavurla Entha school la irukunu sollunga sir

    ReplyDelete
  2. Pta la join panna yaar kitta kekkanum.....

    ReplyDelete
  3. Please tell me zoology vacant in cuddalore dt

    ReplyDelete
  4. இந்த மாதிரி PTA வாயிலாக ஆசிரியர்களை நியமிப்பதை எதிர்த்து ஒரு வழக்கு போடத்தான் செய்யணும்

    ReplyDelete
  5. சம்பளம் யார் தரது

    ReplyDelete
  6. please help me any eng vacancy intenkasi pavoorchatram

    ReplyDelete
  7. PTA பணியில் யாரும் சேர வேன்டாம் தோழர்களே.ஏன் என்றால் இந்த காரணத்தை காட்டி PGTRB தேர்வு நடத்த மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. yes correct..yarum join panathinga..salary um regulara 7500 m mulusa kidaikathu..so serathinga yarum..namaku thevai niranthara velai..atharku udane poti thervu..

      Delete
  8. MLA salary one lakh, PTA teachers salary 7500 vilangidum

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி