Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET, TRB தேர்வு முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது. தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

15 comments

 1. ஆசிரியர் நியமனத்தை தவிர அனைத்தும் செய்கிறீர்கள். தினம் ஒரு அறிக்கை. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், சுமார் 1 லடசம் பட்டதாரி ஆசிரியர்கள் உங்கள் அறிக்கையை தினமும் எதிர்பார்த்து வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளோம்

  ReplyDelete
 2. அரசே ஸ்கேன் செய்யுமா?
  இப்பதான் பயம் அதிகமாகிறது....

  ReplyDelete
 3. Appo namba pasangaluku yantha prachanaium Ella ...stright ah ve poi amount kuduthuduvan..apram kastapattu Paduchetu nama thenamum ethu mathere arikaya nama pathukette erukavenduyathan

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ஆசிரியர் தகுதி தேர்வு உண்டா இல்லயா அக்டோபர் 06,07 வைக்கிறனிங்க அந்த அறிவிப்பையே இன்னும் காணம் இதனால இளைஞர்க்கு தான் இலாபம் விண்ணப்பம் 50 தேர்வு கட்டணம் 500. தேர்வுக்கு போகும் போது 200 மொத்தம் 750 ரூபாய் மிச்சம்

  ReplyDelete
 6. நா என்ன சோல்லறேன் அமைச்சர் சேங்கோட்டையன் அப்பா அப்பா சுய நினைவே இல்லாம பேசுறகிறார் நல்லா மருத்துவரிடம் காண்பிக்குமாறு டாக்டர் எடபாடி பழனி வேண்டி கொள்கிறோம் இப்படிக்கு படித்த ஏமாலிகள்

  ReplyDelete
 7. அமைச்சர் வாய் சொல்லில் வீரன்யா

  ReplyDelete
 8. Appo ethuku munadi nadantha exam yellthalaium 420 work pathu erukinga appadi Thana (ennimey vayasuku vantha Enna varalaba Enna😭)

  ReplyDelete
 9. Gang leader mr.minister than.avar mela avar action eduppara?good joke 2019

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. Daily news pathu pathu emathu poide irukom tet ku oru mudive illaiya....

  ReplyDelete
 12. School education department Ku yelarai (7.5) saniyan pidithu ullathu. 2.5 yrs sani in vakkra kaalam mudiyum varai candidates amaithi kaakka vendum!!!.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives