TET - பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

TET - பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!


சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்ப தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் கூவக்காபட்டி சவும்யா உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:


பி.எஸ்சி.,(புவியியல்) பி.எட்., முடித்துள்ளோம். 2017 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சியடைந்தோம். 2017 ஜூலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 2014 ல் வெளியிட்ட அரசாணைப்படி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் முன்பு நிரப்பப்பட்டன.


தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் மட்டும்
போதாது; போட்டித் தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் பணியிடம் ஒதுக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் எங்களைப் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 2014 அரசாணைப்படி
தகுதித் தேர்வு, வெயிட்டேஜ் அடிப்படையில் சமூக அறிவியல்
பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். 2014 அரசாணையை பின்பற்றாமல் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு செய்தனர்.


நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டார்.

8 comments:

  1. இடை நிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்தவுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன் பேட்டி......



    இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் ஒப்புதலுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக, புதுச்சாம்பள்ளியில் உள்ள பள்ளியில் மத்திய அரசின் அட்டால் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்துவைத்த செங்கோட்டையன், ஏழை மாணவர்களுக்கு இதுபோன்ற உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    https://www.polimernews.com/view/26825-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88---%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

    ReplyDelete
    Replies
    1. Paer 1 kku exam illaya ?appo enga nilamai?paper 1 any news?

      Delete
    2. Paer 1 kku exam illaya ?appo enga nilamai?paper 1 any news?

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் ஆகிய நம்மள இந்த ஆளு கிருக்கு பிடிக்க வச்சிடுவார் போல .தினம் தினம் ஒரு பேட்டி,,,,, முடியல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி