TNPSC - Group 4: காலி இடங்கள் விநியோகப் பட்டியலில் (Distribution of vacancies List) விபரங்களை பார்ப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

TNPSC - Group 4: காலி இடங்கள் விநியோகப் பட்டியலில் (Distribution of vacancies List) விபரங்களை பார்ப்பது எப்படி?


(Group-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு)


இன்று TNPSC துறை வாரியாக, எந்த எந்த பணி இடங்களுக்கு, எந்த எந்த பிரிவில் வேலை காலி இடங்கள் உள்ளது என்று அறிவித்து உள்ளது.

அந்த காலி இடங்கள் விநியோகப் பட்டியலில் இருந்து எவ்வாறு,

எத்தனை காலியிடங்கள் உள்ளன?.

எந்த எந்த துறையில் காலியிடங்கள் உள்ளன?

இன வாரியாக எந்த எந்த பிரிவிற்கு எத்தனை உள்ளது?

என்பதனைப் பார்த்துக் கொள்ளலாம்.

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், கீழ்கண்ட பதவிகளுக்கு என தனி தனியாக விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

VILLAGE ADMINISTRATIVE OFFICER -- 1822
JUNIOR ASSITANT -- 5010
TYPIST -- 3973
STENO TYPIST-- 931
FIELD SURVEYOR -- 102
DRAFTSMAN -- 156

TOTAL -- 11994

முதலில் கூறப்பட்ட 9351-காலியிடங்களுடன், பின்னர் கூடுதலாக 1909 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 11,281 என அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது அதனை விட 713 காலியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது மொத காலியிடங்கள் எண்னிக்கை 11994 ஆக உள்ளது.

அதாவது, தேர்வு அறிவிப்பு வந்த நேரத்தில் சொல்லப்பட்ட காலியிடங்களை விட கூடுதலாக 2643 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.

இதனை இந்த அட்டவணை மூலம் நாம் உறுதி செய்யலாம்.

இப்பொழுது ஒரு உதாரணத்துக்காக இளநிலை உதவியாளர் பதவிக்கு மட்டும் எப்படி அந்த அட்டவணையைப் பயன்படுத்தி விபரங்களைத் தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

இளநிலை உதவியாளர் பதவிக்கு என இந்த அட்டவணையில் மொத்தம் 12 பக்கங்கள் உள்ளன.

முதலில் சீரியல் நம்பர் இருக்கும், பின்னர் டிபார்ட்மென்ட் இருக்கும், அதன் பின்னர் சர்வீஸ் என்று விபரங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இதில் TNMS என்பது, எனப் TAMIL NADU MINISTERIAL SERVICE பொருள் படும்.

அதாவது தமிழில் தமிழ்நாடு அமைச்சுப் பணி என்று சொல்வார்கள். உங்களுக்குத் புரியும்படி சொல்வது என்றல் அனைத்து எழுத்துப் பணிகள் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத நிர்வாகப் பணிகள் இந்த அமைச்சுப் பணியின் கீழ் வரும். அரசு துறைகளில், தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர் போன்ற பதவிகள் இந்த அமைச்சுப் பணியின் கீழ் வரும்.

அது போல் TNJMS, என்பது TAMILNADU JUDICIAL MINISTERIAL SERVICE எனப் பொருள்படும். நீதி மன்றம் சம்பந்தப்பட்ட காலி இடங்கள் இதன் கீழ் செல்லும்.

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஏற்கனவே, வெளியிட்டுள்ள ஓவர் ஆல் ரேங்க் லிஸ்டில், நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களோ அந்த அந்தப் பிரிவில் உள்ள உங்கள் வகுப்பிற்கு உள்ள பணி இடங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கீழ்க் கண்ட இணைப்பில், உங்கள் ஓவர் ஆல் ரேங்க் எந்த எந்த பிரிவுக்குகளுக்கு தகுதியானது என்று பார்த்துக் கொள்ளலாம்.

VAO:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_VAO_2015-2019.pdf

Junior Assistant:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_JUNIOR_ASSISTANT.pdf

Typist:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_TYPIST.pdf

Steno:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_STETO_TYPIST.pdf

Field Surveyor:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_FIELD_SURVEYOR.pdf

Drafts Man:

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_DRAFTSMAN.pdf

உதாரணத்திற்கு BC Women என்றால், அவரது ஓவர் ஆல் ரேங்க் பின்வரும் எந்த எந்த பிரிவுகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.

General Turn (General) - GTG

General Turn (women) ‐ GTW

BC (General) - BCG

BC (Women) - BCW

இந்த நான்கு பிரிவுகளில் பணி எடுக்க அவர் தகுதி ஆனவரா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, BC-இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதிகமான மதிப் பெண் பெற்று இருந்தால் அவர் இந்த நான்கு பிரிவுகளிலும் பணி எடுக்கக் கூடிய வாய்ப்பினைப் பெறுவார். அதவாது அவர் பொது பிரிவிற்கும் (General) தகுதி பெறுவார் , அவரது BC இனத்திற்கும் தகுதி பெறுவார்.

அவருக்கு பணி எடுக்கும் வாய்ப்புகள், துறையைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இப்பொழுது கொஞ்சம் குறைவான மதிப்பெண் பெற்று இருக்கும் ஒரு BC-இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் போட்டியாளர், பொதுப்பிரிவிற்கு தகுதி பெறாமல் அவரது இனமான பிரிவில் மட்டும் பணி எடுக்கத் தகுதி பெறுவார்.

இதனை, நீங்கள் கலந்தாய்வு செல்லும் பொழுது ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிவில் TNPSC-யால் வெளியிடப்படும் கலந்தாய்வு முடிவினை (EVERY DAY COUNSELLING STATUS) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கலந்தாய்விற்குச் செல்லும் முதல் நாள் பொது பிரிவு (General) மற்றும் BC-பிரிவு இரண்டிலும் பணி இருந்தால் நீங்கள் எடுக்கலாம், அது தவிர்த்து பொது பிரிவில் இல்லாமல் BC-யில் மட்டும் இருந்தால் அந்த பிரிவில் பணி எடுக்கலாம்.

----------------------------------------------------------

இப்பொழுது அந்தப் பெண், PSTM எனில் பின்வரும் இனங்களிலும் அவர் வேலை பெற தகுதி உடையவர் ஆகிறார்.

General Turn (General) (PSTM) - GTG-PSTM

General Turn (Women) - GTW-PSTM

BC (General) (PSTM) - BCG-PSTM

BC (Women) (PSTM) - BCW-PSTM

இதிலும், மேலே சொன்னதை போன்று கலந்தாய்வில் பொழுது காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் எடுக்கலாம்.
-----------------------------------------------------------------------------------

இது போல், மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர், DEAF, PSTM, BLIND என்று அவரவர் வகுப்பில் இட ஒதுக்கீடு உண்டு.

---------------------------------------------------------------------------------

இளநிலை உதவியாளர் பதவிக்கு என்று கொடுக்கப்பட்ட காலி இடங்கள் விநியோகப் பட்டியலில், (DISTRIBUTION OF VACANCIES LIST) மொத்தம் 12 பக்கங்கள் உள்ளன.

பின்னர் இந்த பன்னிரெண்டு (12) பக்கங்கள் கொண்ட அட்டவணையை பிரிண்ட் எடுக்க வேண்டும்.

A4 பேப்பரில் எடுப்பதை விட, A3 பேப்பரில் எடுப்பது சிறந்தது.

SINGLE SIDE பிரின்டிங் எடுக்க வேண்டும்.

DOUBLE SIDE PRINT எடுக்க கூடாது.

பக்கம் ஒன்று (ONE) இடது புறமும், பக்கம் 7-ஐ (SEVEN) வலது புறமும் வைத்து பொருத்தி (படம் 1 ஜக் காண்க.)

நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தகுதியானவர் என்று முன்பு பார்த்து வைத்து இருந்தீர்களோ, அந்த பிரிவில் உள்ள காலி இடங்கள் மற்றும் துறையை தெரிந்து கொள்ளலாம்.

இதே போல், பக்கம் 2 (TWO) ஐ பக்கம் 8 (EIGHT) உடன் பொறுத்த வேண்டும். (படம் 2 ஜக் காண்க.)

இதே போல், பக்கம் 3 (THREE) ஐ பக்கம் 9 (NINE) உடன் பொறுத்த வேண்டும். (படம் 3 ஜக் காண்க.)

இதே போல், பக்கம் 4 (FOUR) ஐ பக்கம் 10 (TEN) உடன் பொறுத்த வேண்டும். (படம் 4 ஜக் காண்க.)

இதே போல், பக்கம் 5 (FIVE) ஐ பக்கம் 11 (ELEVEN) உடன் பொறுத்த வேண்டும். (படம் 5 ஜக் காண்க.)

இதே போல், பக்கம் 6 (SIX) ஐ பக்கம் 12 (TWELVE) உடன் பொறுத்த வேண்டும். (படம் 6 ஜக் காண்க.)

அதாவது,

page 01 with page 07
page 02 with page 08
page 03 with page 09
page 04 with page 10
page 05 with page 11
page 06 with page 12

ஒருவர் இளநிலை உதவியாளர் (Junior Asst including Drafts Man, Field Surveyor) தவிர
தட்டச்சர் (Typist), VAO, STENO TYPIST போன்ற பதவிகளுக்கும், தேர்வாகி இருந்தால் அந்த அந்த பதவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை (DISTRIBUTION OF VACANCIES LIST) தனி தனியாக பிரிண்ட் எடுத்து இரு பதவிகளுக்கும் உண்டான தங்கள் காலி இடங்கள், துறை, முதலியவற்றை பார்த்துக் கொள்ளலாம்.

அந்த பக்ககங்களை பிரதி எடுத்து பின்வருமாறு பொருத்திப் பார்க்க வேண்டும்.

2). VAO
------------

Page 01, Page 02, Page 03 ( மூன்றையும் இடமிருந்து வலமாக வரிசையாக அடுத்து அடுத்து வைத்துப் பார்க்க வேண்டும்)

3) TYPIST:
--------------

மொத்தம் 12- பக்கங்கள். எனவே இதற்கும் இளநிலை உதவியாளருக்கு கூறு உள்ளதை போன்று பிரதி எடுத்த பக்கங்களை பொருத்திப் பார்க்க வேண்டும்.

அதாவது,

page 01 with page 07
page 02 with page 08
page 03 with page 09
page 04 with page 10
page 05 with page 11
page 06 with page 12

4) DRAFTSMAN:
--------------------------
ஒரே பக்கம்தான் எனவே பிரச்சினை இல்லை, அப்படியே பார்த்துக் கொள்ளலாம்.

5) FIELD SURVEYOR:
------------------------------

இதுவும் ஒரே பக்கம்தான். எனவே பிரச்சினை இல்லை.

இவற்றிலிருந்து நீங்கள் தகுதி பெற்றுள்ள துறைகளை, தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். கலந்தாய்வு செல்லும் போது எளிதாக இருக்கும்.

எனக்கு ABCD-தான் தெரியும்.

ஆனால் இந்த DISTRIBUTION OF VACANCIES LIST-ல என்னனு சொன்னா, STEX, MBCDW, GTWP லாம் போட்டு இருக்காங்க.

இது எல்லாம் என்னதுன்னே எனக்குத் தெரியல ன்னு சொல்றவங்க கீழ்கண்ட இணைப்பில் சென்று அதில் உள்ள PDF பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளவும்.

http://www.tnpsc.gov.in/docu/counselling_guidelines.pdf

இந்தப் பதிவினை படித்தால் முதலில் புரியாதது போல் சிலருக்கு இருக்கலாம், இதனை மீண்டும் மீண்டும் படித்து நான் கூறி உள்ளவாறு காலியிடங்கள் விநியோகப் பட்டியலை பிரதி எடுத்து , மேலே மற்றும் படத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு பக்கங்களை சரியாகப் பொருத்தி பார்த்தல் உங்களுக்கே புரியும்.

வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி