TNPSC - வினாத்தாளில் பிழைகள்: தேர்வர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

TNPSC - வினாத்தாளில் பிழைகள்: தேர்வர்கள் அதிர்ச்சி!



டி.என்.பி.எஸ்.சி நடத்திய வேளாண் அதிகாரி பணிக்கான தேர்வின் வினாத்தாளில் பிழைகள் இருந்தது தெரிய‌வந்துள்ளது.

28 மற்றும் 7‌1-ஆவது வினாக்களுக்கான அனைத்து விடைகளும் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் 19‌23-ஆம்‌ ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விடை 4 ஆப்ஷன்களிலும் வழங்கப்படவில்லை. அதேபோல், முதல் ரயத்வாரி செட்டில்மெண்ட் எங்கு, எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்ற வினாவிற்கும் சரியான விடை ஆப்ஷன்களில் வழங்கப்படவில்லை.

இதுதவிர, 24-ஆ‌வது வினாவில் Non cooperation movement-ற்கு ஒத்துழையாமை இயக்கம் என மொழிபெயர்க்காமல், சட்டமறுப்பு ‌இயக்கம் எ‌ன மொழிபெயர்க்க‌ப்பட்டு‌ள்ளது.‌ இதனால், தேர்வெழுதியவர்கள் மதிப்பெண்களை ‌இழக்கும் நிலை‌ ஏற்பட்டுள்ளதால், இதனை டி.என்.பி.எஸ்.சி கவனத்தில் கொள்‌ள வேண்டும் என‌ தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

192 பணியிடங்களுக்கா‌க கடந்த ஜூலை 14-ஆம் தேதி‌‌ நடத்தப்பட்ட‌ தேர்வை 9 ஆயிரத்து 913 பேர் எழுதி‌னர். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி-யிடம் கேட்டபோது, வல்லுநர் குழுவின் ஆய்விற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவுசெய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி