Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முறைகேடால் முடங்கிய TRB - அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில் நடத்தபடுமா?


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில் நடத்தப்படாமல், பலமாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.இதனால், தேர்வு பணிகளை, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை நியமிக்க, டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரியமானது, தேர்வு பணிகளை மேற்கொள்கிறது.பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், டி.ஆர்.பி., நடத்திய, பல தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன. அத்துடன், தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகவும், புகார்கள் எழுந்துள்ளன.அதற்கேற்ற வகையில், அரசு கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 200க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, தரவரிசையில் அவர்கள் முன்னிலை பெற்றனர்.இதை, மற்ற தேர்வர்களே கண்டுபிடித்து, டி.ஆர்.பி.,க்கு புகார் எழுதியதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்விலும், 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இதில் விசாரணை நடந்தபின், எட்டு பேரின் விடை தாள்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யின் ஆண்டறிக்கையில் அறிவிக்கப்பட்ட, அனைத்து தேர்வுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

வேளாண் பயிற்றுனர் பதவிக்கு, 25 காலியிடங்களுக்கு, ஜூலை, 14ல் தேர்வு அறிவிக்கப்பட்டும் நடக்கவில்லை.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, ஆக., 4ல் அறிவிக்கப்பட்ட தேர்வும் நடைபெறவில்லை.அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, 1,883 காலியிடங்களுக்கு, ஜூனில் நடத்த வேண்டிய தேர்வு; உதவிதொடக்க கல்வி அதிகாரி பணிக்கு, 57 இடங்களுக்கு, செப்.,15ல் நடத்தப்பட வேண்டிய தேர்வும் நடத்தப்படவில்லை.அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வு, அக்.,6ல் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை.

இப்படி எல்லா தேர்வுகளும் நடத்தப்படாமல் முடங்கி கிடப்பதால், கல்வி துறையில் காலியிடங்கள் அதிகரித்து, பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.எனவே, முறைகேடு பிரச்னைகளை களையும் வரை, டி.ஆர்.பி.,யின் தேர்வு பணிகள் அனைத்தையும், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என, கல்வியாளர்களும், பட்டதாரிகளும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

51 comments

 1. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்காதீர்கள்.உரிய நேரத்தில் தேர்வை நடத்தி வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்.லட்சாதி லட்சமான படித்த பட்டதாரிகளின் மனக்குமுறல் சும்மா விடாது.

  ReplyDelete
 2. முதலில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்குகள் பின்னர் தேர்வு நடத்தலாம்...

  ReplyDelete
 3. +1,+2 வில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது 100 பள்ளிகள் மேல்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தபட்டுள்ளன இதில் சுமார் 3800முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன எனவே மாணவர்களின் நலன் கருதி PG TRB போட்டி தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
 4. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர் இதற்கான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

  ReplyDelete
  Replies
  1. Kalla otu kuthnadhe unga areala than. .

   Delete
  2. Please take action above comment . Qualified candidates are highly affected .

   Delete
  3. Antha vacant full pandrathukku nadavadikkai eduppathu pola theriyavillai...angu enna nadakkuthu endru theriyala ....eppo enna pannuvanga nnum theriyala ...

   Delete
  4. pg trb 2017 list varum bro wait

   Delete
  5. 👍Thank you sir. Wait and see

   Delete
  6. Sakthi sir neenga soldrathu pg one more list ahhh...??? Appadi vantha all. Subjetkkuma..?? Or chemistry kku mattum varumaaa....

   Delete
  7. all subjectku varum but athega posting c
   hemistry

   Delete
  8. We have chemistry what's app group would you like to join with us

   Delete
  9. Watts app link godunga bosskaran sir...

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. Shakthi sir, how u r that sure about next pgtrb 2017 list ....

   Delete
 5. ஆட்சியாளர்கள் எதுவும் செய்ய போவது இல்லை தினமும் ஒரு அறிவிப்பை தவிர

  ReplyDelete
 6. கல்வி அமைச்சர் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் ஆனால் ஒன்று கூட நடைமுறைக்கு வரவில்லை.

  ReplyDelete
 7. They are not ready to do good things to people.

  ReplyDelete
 8. Replies
  1. next govt la than..college trb..

   Delete
  2. Good Night 💤🌙
   😊 Sweet Dream
   🌠🌠🌠🌠🌠🌠🌠

   Delete
 9. Already tnpsc result vida 2-3 yrs aaguthu....trb velaiyum 3 yrs aagum...so trb la irukkurathu nallarhu...oolal pannama correct ah nadanthukkanum....& tnpsc mattum oolal nadakkavillaiya..????( 2014-15 group 1 la..)

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சார் ஊழல் ஊழல்னு சொல்றத விடுங்க.நம்பிக்கையோடு படிங்க.நான் 2012,2013,2015 மூன்று Trbலயும் 1 மதிப்பெண்ல தான் பணி இழந்தேன். ஆனாலும் நம்பிக்கையை விடலை.2017 ல் நான் பணிவாய்ப்பு பெற்றுவிட்டேன்.So ஊழல் பற்றி பேசும் நேரம் நல்லா படிங்க.எங்க நண்பர்கள் நிறைய பேர் பணம் இல்லாமல் ஆசிரியர் ஆனோம்.ஒரு சகோதரனா இத சொல்றேன்.

   Delete
  2. சிறப்பு வாழ்த்துக்கள் சார் ஆண்டு அட்டவணையில் அறிவித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் உள்ளார்களே என்று ஆதங்கம்

   Delete
  3. ஊடகங்கள் காதுகளுக்கே இப்போழுதுதான் கேட்டு இருக்கிறது போல

   Delete
  4. கல்வி செய்தி உட்பட

   Delete
  5. Padinga bro be confident. Pg Trb ku padinga kandipa achieve panalam

   Delete
  6. Pg trb poruthavarai 2015,2017 2exam processum 4 mnth kula mudinchu pochu

   Delete
  7. sir, which subject you can got job

   Delete
  8. Praba sir, tell your mobile no

   Delete
  9. praba sir, can you tell your mobile number

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
 11. Experienced Tnpsc and inexperience trb in oolal

  ReplyDelete
 12. Pass pannavunga ellorukum velai podunga arivipukal pothum😭

  ReplyDelete
 13. First tet passed candidates Ku job podunga..please.. waiting for job all candidates.

  ReplyDelete
 14. மூடுங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை. இதர்குகாரணம் யார்?

  ReplyDelete
 15. Pg TRB varum sir.100% sure.new syllabus LA.eco.che,Tamil, vacant fulls irukku.padinga.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. Pg Trb English what's up group no anupunka sir

  ReplyDelete
 18. தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் வேலை கொடுங்கள் தேர்ச்சி பெற அவர்கள்பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல

  ReplyDelete
 19. சிரப்பாசிரியர்தேர்வு எழுதியவர்கள் ஒரு வருடம் கழித்து இன்னும் பணி நியமன ஆணை வழங்காமல் உள்ள து வேதனைக்குரியது

  ReplyDelete
 20. இதே நிலை நீடித்தால் தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்க நேரிடும்.எந்த நம்பிக்கை யில் ஒரு போட்டி தேர்வு எழுதுவது அறிவிப்புகள் மட்டும் தினந்தோறும் வெளிவந்த நிலையில் உள்ளது.ஆனால் இது வரை ஒன்று கூட நிறைவேறவே இல்லை.

  ReplyDelete
 21. Posting podungapa.govt.change na seniority varum.CM sir konjam TRB i paarunga.TET,PG,SPL Tr,posting podunga.college TRB,Polytechnic lect.podunga sir.

  ReplyDelete
 22. Ithu asiriyar thervu variyam illa!Asiriyar sorvu variyam!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives