நெட், செட் தேர்வுகளுக்காக அக்.14 இல் இலவச பயிற்சி முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2018

நெட், செட் தேர்வுகளுக்காக அக்.14 இல் இலவச பயிற்சி முகாம்


பாளையங்கோட்டையில் நெட், செட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் இம் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதல்வர் மு.முகம்மது சாதிக் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை என்.டி.ஏ.(N​A​T​I​O​N​AL TE​S​T​I​NG AG​E​N​C​Y) அமைப்பு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடத்த உள்ளது.

நிகழாண்டில் ஆன்-லைன் முறையில் எழுதும் இத் தேர்வுக்கு திருநெல்வேலியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும்.

ஆய்வு மாணவர்கள், அரசுதவி பெறாப் பாடப் பிரிவுகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், முதுநிலை இரண்டாமாண்டு மாணவர்கள் உள்ளிட்டோர் இத் தேர்வுகளில் பங்கேற்கலாம். செட், நெட் தேர்வுகள், ஜெ.ஆர்.எப். எனப்படும் முனைவர் பட்ட ஆய்வுக்கான உதவித்தொகை தரும் தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு தென்மாவட்ட மாணவர்-மாணவிகளிடம் மிகவும் குறைவாக உள்ளது. அதனை போக்கும்விதமாகவும், விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் நெட் மற்றும் செட் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இம் மாதம் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.

தொடர்ந்து சலுகைக் கட்டணத்தில் டிசம்பர் மாதம் வரை பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.


இரண்டாவது முறையாக தகுதி நீட்டிப்பு பெற்று வரும் 2023 ஆம் ஆண்டுவரை தன்னாட்சி கல்லூரியாக செயல்பட பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியிருக்கிறது என்றார்.

பேட்டியின்போது கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

3 comments:

  1. ஐயா நான் 2018 ஜூலை மாதம் நடந்த நெட் எக்ஸாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டேன் ஆனால் இன்னும் எனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை அடுத்து நான் என்ன செய்வது தயவு செய்து கூறவும்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள், நீங்க எழுதுனது ugc net அல்லது csir நெட்டா??? அந்த வலைதளத்துல போய் பாருங்க, அதுக்கான வழிமுறைகள் குடுத்துருப்பாங்க, கண்டிப்பாக கிடைக்கும், பயம் வேண்டாம்,

      Delete
  2. Pongada mentelungala muthala posting podungada

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி