அக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2018

அக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு!


ஏழை எளிய மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை அறிந்து  கொள்ளும் நோக்கத்தில் அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு நாள் விழிப்புணர்வுச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாநில அளவில் ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா வட்டாரங்களில் தெரிவித்தனர்..

சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவ, மாணவிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் நிகழாண்டிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைமாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒருநாள் விழிப்புணர்வுச் சுற்றுலாவுக்கு மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து அழைத்துச் செல்லவுள்ளனர்.இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் மாநில அளவில் மொத்தம் ரூ.64 லட்சம் நிதி சுற்றுலாத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து தலா 15 மாணவ, மாணவிகள் வீதம் மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.அந்த வகையில், பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்புப் பண்ணை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா  அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, தொப்பி, 3 வேளை சிற்றுண்டியும்  வழங்கப்படவுள்ளது.

இந்த சுற்றுலாப் பேருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து அக்டோபர் 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்படும்.அதனால், அன்றைய நாளில் ஒவ்வொரு  பள்ளியிலிருந்தும் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் தயாராக வர வேண்டும் என சுற்றுலாத் துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி