சித்தா மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 2018 - வெளியீடு...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2018

சித்தா மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 2018 - வெளியீடு...!


சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளதுசித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த படிப்பில் சேர, 3,670 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளிஇடப்பட்டுள்ளதுஇதில், 3,471 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். வரும், 20 முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவதுஆயுஷ் அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள், இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. அந்த பட்டியல், ஓரிரு நாளில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, வரும், 20 முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி