திறனாய்வு திறனாய்வு தேர்வு 2018 - " ஹால் டிக்கெட் " வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2018

திறனாய்வு திறனாய்வு தேர்வு 2018 - " ஹால் டிக்கெட் " வெளியீடு!


மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின்கல்வி திறன் அடிப்படையில், போட்டி தேர்வு நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, வரும், 4ம் தேதி நடக்க உள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு கூட நுழைவு சீட்டான, ஹால் டிக்கெட்டை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுஉள்ளது.

பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கலாம்.இதை, தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி