பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2018

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம்


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும்,பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண், விடை திருத்தும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால், அவற்றை, சி.பி.எஸ்.இ., முன்கூட்டியே அறிவிக்கும்.இதன்படி, இந்த ஆண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 ஆங்கில பாட வினாத்தாளில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுவரை, 40 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டு வகைகளாக கேள்விகள் இடம் பெற உள்ளன.முதல் வகையில், சரியான விடையை தேர்வு செய்யும், ஐந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. மிக குறுகிய விடை அளிக்கும் வகையில், ஒன்பது கேள்விகள்; குறுகிய விடையளிக்கும் மூன்று கேள்விகள்; விரிவான விடையளிக்கும் இரண்டு கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளை, சி.பி.எஸ்.இ.,யின், http://cbseacademic.nic.in/ என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி