2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2018

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரப்படுகிறதா ?:கண்காணிக்க சிறப்புக்குழு


பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுவது குறித்து கண்காணிக்க, சிறப்பு குழுக்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், இரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை அமல்படுத்தும் வகையில், தொடக்கக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது. தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடப்புத்தகம், குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது. உடல் எடையில், 10 சதவீதத்துக்கும் மேல், புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது உள்ளிட்டவற்றை, அனைத்து கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.இதை கண்காணிக்க, சார்நிலை அலுவலர்களை கொண்டு, சிறப்புகண்காணிப்பு குழுவை உருவாக்கியும், பள்ளி ஆய்வின் போது, கவனம் செலுத்தவும், முதன்மைகல்வி அலுவலர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி