மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களில் 7 பேர் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2018

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களில் 7 பேர் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாற்றம்!


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களில் 7 பேர் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,இணை  இயக்குநர் மாற்றம் அடிக்கடி நிகழ்வது வழக்கம். சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன்பு 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 6பேர் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

இதன்படி கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் சே.பாலா திருநெல்வேலிக்கும், அங்கு பணியாற்றிய ச.சக்திவேல் முருகன் கன்னியாகுமரிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்ட  கல்வி அலுவலர்களாக பணியாற்றி 3 ஆண்டுகளை நிறைவு செய்யாத  4  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு  பதவி உயர்வு மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கே.அருளரங்கன் பெரம்பலூர், கோவை அ.பாலு முத்து சிவகங்கை, சேலம்  கே.தங்கவேல் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ஆஷா கிறிஸ்டி எமரால்ட் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 comment:

  1. Thanks for sharing, nice post! Post really provice useful information!

    Giaonhan247 chuyên dịch vụ mua hàng trên amazon vận chuyển ship hàng từ mỹ cũng như mua hàng trên amazon ship về việt nam uy tín cùng với mua hàng mỹ với sản phẩm vòng tay pandora trên web pandora úc giá rẻ.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி