வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2018

வட்டார வள மையங்களில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு மாற்றம்


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில்413 வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன.

இங்கு மாதம் ரூ.7,700 சம்பளத்தில் 11,191 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்

இந்த வகுப்புகளில் 100 மாணவர்கள் இருந்தால் அந்த பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு ஓவிய ஆசிரியர் மற்றும் தையல், இசை,கணிதம், கட்டடக்கலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு ஒரு ஆசிரியர் வீதம் மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்கட்டாய கல்விஉரிமைச் சட்டம் 2009ன் படி 6,7,8 வகுப்புகளில்100 மாணவர்கள் இருந்தால் அந்த வகுப்புகளில் மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கலாம், எனகூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை பின்பற்றி தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து, வட்டார வள மையங்களில் பணியாற்றும்பகுதி நேர ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

4 comments:

  1. Varum ... Aaana??????
    Varadha😁😀😁😀😁😀😁😀😁
    Merritt list results

    ReplyDelete
  2. வட்டார வள மையத்துல பகுதி நேர ஆசிரியரா? யார் அது?

    ReplyDelete
  3. இதுவரை கேள்விப்படவில்லை தான்.இவ்வாறு எத்தனை பேர் உள்ளனர்.

    ReplyDelete
  4. Computer tr aa solluranga. Deo office ceo office brt office endru mari mari online work koduppanga. Ungalukku eppadi theriyum?? Velaikku ponna engalukku thane theriyum?? Enga evolo nal duty parthom endru?? En friend 3 months aa deo office ill than duty.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி