ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு மாற்று ஏற்பாடுகள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2018

ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு மாற்று ஏற்பாடுகள் தயார்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்



ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம்நடக்கிறது.

போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை விட்டுள்ளார். பள்ளிகள் அனைத்தும் திறந்து இருக்கும். மாற்று ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

21 comments:

  1. காலாண்டு விடுமுறை 12 நாட்கள் விட்டும் பத்தலையாம் so இன்னும் விடுமுறை கொடுத்து சம்பளம் கொடுக்க நல்லா இருக்கும்

    ReplyDelete
  2. காலாண்டு விடுமுறை 12 நாட்கள் இல்லை நண்பரே 10 நாட்கள் மட்டும் தான் அந்த விடுமுறை நாட்களிலும் எத்தனை ஆசிரியர்கள் நீட் பயிற்சி வகுப்புகளுக்கும் NSS சிறப்பு முகாம்களுக்கும் சென்றார்கள் என்று உங்களுக்கு தெரியாது நண்பரே.ஆசிரியர்களை குறை கூறுதை முதலில் கைவிடுங்கள்.

    ReplyDelete
  3. ஒரு வருடத்திற்கு 12 நாட்கள் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் அது தங்களுக்கு தெரியாது போலும்

    ReplyDelete
  4. ஒரு சிலர் NEET க்கு போயிருக்கலாம்.பாடங்களை தரமாக விளக்கமாக நடத்தினால் NEET க்கு தனியான பயிற்சி தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்ன வந்தது

      Delete
    2. பாடங்களை விளக்கமாகவும் தரமாகவும் நடத்த தெரிந்தால் மட்டுமே TRB Exam ல் தேர்ச்சி பெற முடியும் ஒரு ஆசிரியராக முடியும்.தங்களுக்கு இது தெரியாது என நினைக்கிறேன்.

      Delete
    3. சற்று புரிந்து பேசவும். கோபம் தவிர்க்கவும்

      Delete
    4. கோபம் இல்லை நண்பா ஒரு சில ஆசிரியர்களுக்காக, அனைத்து ஆசிரியர்களையும் தவறாக கூறுவது ஞாயமற்ற செயல்.

      Delete
  5. ஆசிரியர் பணி புனிதமான பணி யாரும் அவர்களை இழிவாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. அரசு பள்ளியில் கேமரா வைத்தால் எல்லாம் தெரிந்துவிடும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நிச்சயம் தெரிந்துவிடும் எங்களது கோரிக்கையும் அதுதான் அப்பொழுதாவது ஒரு அரசு ஆசிரியரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

      Delete
  7. Trbல் negative mark இல்லை அதையும் ஞாபகம் வைத்து பேசவும்

    ReplyDelete
    Replies
    1. ஏற்றுக்கொள்கிறேன் Negative mark இல்லாத நிலையிலும் தாங்கள் தேர்ச்சி பெறாதது வருத்தமளிக்கிறது.

      Delete
  8. புனிதமான பனியை பலர் பொழுது போக்காக நினைக்கின்றனர்

    ReplyDelete
  9. இந்த போராட்டம் எங்களுக்காக மட்டும் அல்ல வருங்கால ஆசிரியர்களான உங்களுக்கும் சேர்த்து தான் ஆதலால் தயவு செய்து குறை கூறாதீர்கள்.இந்த போராட்டத்தால் உங்களுக்கு எந்த விதத்திலும் இழப்பு ஏற்பட போவதில்லை.

    ReplyDelete
  10. தேர்ச்சி பெற்று பணியில் இருந்து கொன்டுதான் பேசுகிறேன்

    ReplyDelete
  11. மாணவர்களின் உண்மையான என்னிக்கையை மறைத்தது யார்? EMIS. Super

    ReplyDelete
  12. தணியார் பள்ளியில் வேலை பார்த்துவிட்டு அரசு பள்ளியில் வேலை பார்ப்பது சந்தோஷமாகவும்ஆனால் பயமாகவும் உள்ளது. இன்று வேண்டுமானால் பட்டிமன்றத்தில் பேசுவது போல் பேசிவிடலாம். நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான்

    ReplyDelete
  13. மாணவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் வருங்கால ஆசிரியர்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி