மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை  உயர்நீதிமன்றத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி கடந்த ஆண்டு தாக்கல் செய்தமனுவில்,
‘தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து தங்களது தாய்மொழியான தெலுங்கில் மொழிப்பாடத்தேர்வை எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதேபோன்று கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்களும் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் கடந்த ஆண்டு தமிழ்பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து அவர்களதுதாய் மொழியில் மொழிப்பாடத்தேர்வு எழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில்இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் படித்து வரும் எத்தனை மாணவர்களுக்கு இதுவரை தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு கோரி உள்ளனர். இந்த விவரத்தை அந்த மாணவர்கள் படித்து வரும் பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக அரசு தெரிவிக்க வேண்டும்.மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் எத்தனை உள்ளன?, அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்? என்ற விவரத்தை தமிழக அரசுஅளிக்க வேண்டும்.

வழக்கு விசாரணை 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

1 comment:

  1. தமிழாசிரியர் இருந்தால் ஏன் விலக்கு கேட்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி