மாநில விதிகளின்படி சி.பி.எஸ்.இ., கட்டணம் : வசூல் வேட்டை பள்ளிகளுக்கு, 'செக்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

மாநில விதிகளின்படி சி.பி.எஸ்.இ., கட்டணம் : வசூல் வேட்டை பள்ளிகளுக்கு, 'செக்'


'மாநில அரசு விதிகளின் படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ.,யின் புதிய விதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரத்திற்கான, புதிய விதிகளில் கூறப்பட்டு உள்ளதாவது:

கூட்டுறவு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் நிறுவனங்கள், வணிக ரீதியாகவோ, லாப நோக்கிலோ பள்ளிகளை நடத்தக் கூடாது. பள்ளியை நடத்துவதற்கான செலவுகள் அடிப்படையில், கட்டணம் வசூலிக்கலாம்

மாணவர் சேர்க்கைக்காக, அறக்கட்டளை மற்றும் நிறுவனம் உள்ளிட்ட எந்த பெயரிலும், நன்கொடைகள் வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம் உட்பட, எந்த கட்டணமும், மாநில அரசுகளின் விதிகளின்படியே வசூலிக்கப்பட வேண்டும்

 மாணவர் யாராவது, படிப்பை பாதியில் விடுவதாக இருந்தாலோ அல்லது வேறு பள்ளிக்கு மாறுவதாக இருந்தாலோ, அந்த மாணவர் படிக்கும் காலம் வரைமட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும். மாற்று சான்றிதழ் கேட்கும் காலம் வரையோ, கல்வி ஆண்டின் இறுதிவரையிலோ, கட்டணம் வசூலிக்கக் கூடாது

மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு முறை விதிகள் மற்றும் செயல்முறை அறிக்கைகள் அடிப்படையில், கட்டண நிர்ணயம் அமைய வேண்டும். பள்ளி மேலாண் கமிட்டியின் ஒப்புதல் அல்லது மாநில அரசின் விதிகள் அடிப்படையில் அல்லாமல், கட்டண மாற்றம் செய்ய அனுமதி இல்லை

மாநிலத்தில் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கான, கல்விக் கட்டணம் தொடர்பான விதிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின்கட்டண நிர்ணயத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழக அரசு முன் வராத நிலையில், சி.பி.எஸ்.இ.,யின் புதிய விதிகள், பெற்றோருக்கு நிம்மதியை அளித்துள்ளன. இனியாவது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி