பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் தமிழக அணி சாம்பியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2018

பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் தமிழக அணி சாம்பியன்


பள்ளிகளுக்கான தேசிய பீச் வாலிபால் போட்டியில் பெரும்பான்மையான பிரிவுகளில் வென்ற  தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்றது. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இடையிலான 64வது தேசிய பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுகளில்  போட்டிகள் நடந்தன. தமிழக அணிகள் அனைத்து பிரிவுகளிலும் பைனலுக்கு முன்னேறின.

மாணவர்களுக்கான யு-19 பிரிவில்  டெல்லி அணியை 9-21, 21-19, 15-10  என்ற புள்ளி கணக்கில்  தமிழக அணி வென்றது. கோவா 3வது இடம், குஜராத் 4வது இடம் பிடித்தன. யு-17 பிரிவில்   தமிழக மாணவர் அணி 21-6, 21-11 என்ற செட்களில் ஒடிஷா அணியை வீழ்த்தியது. டெல்லி 3வது இடம், கோவா 4வது இடம் பிடித்தன.

மாணவர்களுக்கான யு-14 பிரிவில் டெல்லி அணி 21-19, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு அணியை தோற்கடித்தது.

குஜராத் 3வது இடம், வித்யபாரதி 4வது இடம் பிடித்தன. மாணவிகளுக்கான யு-19 பிரிவில்  தமிழகம் 21-1. 21-9 என்ற நேர் செட்களில்  தெலங்கானா  அணிழை வீழ்த்தியது. இப்பிரிவில் டெல்லி 3வது இடம், கோவா 4வது இடம் பிடித்தன.  மாணவியர் யு-17 பிரிவில் தமிழகம் 21-5, 21-16 என கோவா அணியை வென்றது. குஜராத் 3வது இடம், டெல்லி 4வது இடம் பிடித்தன. மாணவியர் யு-14 பிரிவில்   தமிழகம் 12-21, 21-14, 15-13 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தியது. டெல்லி 3வது, தெலங்கானா 4வது இடம் பிடித்தன. தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி