அடுத்த ஆண்டு பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய அரசு அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2018

அடுத்த ஆண்டு பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய அரசு அதிரடி!



2019 ம் ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 2019 முதல் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம், ஸ்மார்ட் வாகனப் பதிவுச் சான்று ஆகியவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே மாதிரி இருக்கும். இவற்றில் QR கோட் உடனான மைக்ரோ சிப் இடம்பெற்றிருக்கும என்பது குறிப்பிடதக்கது. மேலும் NFC வசதியும் சேர்க்கப்படஉள்ளது.

இது மெட்ரோ மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்று, பதிவான தகவல்களை கையடக்கக் கருவி மூலம் அறியும் வகையில் இருக்கும். புதிய ஓட்டுநர் உரிமத்தில் உடல் உறுப்பு தானம் செய்யத் தயாரா என்ற விவரமும் சேர்க்கப்படுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சிறப்பு வாகனங்கள் குறித்த தகவலும் வாகனப் பதிவு சான்றிதழும் இடம்பெறும். இதுதொடர்பாக பேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி, வாகனப் பதிவு சான்றிதழில் உமிழ்வு விதிகள் இருக்கும். அதன்மூலம் மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்காக தேவையை அறிந்து கொள்ளலாம் என்றார்.

நாடு முழுவதும் தினசரி 32,000 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ செய்யப்படுகி்றது. அதேபோல் தினசரி 43,000 வாகனங்கள் பதிவிற்கோ அல்லது மறுபதிவோ செய்யப்படுகி்றது. எனவே யாராவது புதுப்பித்தல் அல்லது மறுபதிவிற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றுகளை வழங்குவார் என்று கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி