அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம் - kalviseithi

Oct 8, 2018

அரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசிரியர் நியமனம்


தொகுப்பு ஊதிய அடிப்படையில் பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் 1474 ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் 16,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ7500 வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 1474 ஆசிரியர்களை நியமிக்கபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் பெற்றோர்- ஆசிரியர் கழகங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ7500 ஊதியத்துடன் நியமிக்கவும்  தெரிவிததுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும். அதற்கான கால தாமதம் கருதி தொகுப்பு ஊதிய அடிப்படையில் மேற்கண்ட பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

முதுநிலை ஆசிரியர்கள் ஆறு மாதத்துக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் குழு அமைத்து 1474 ஆசிரியர்களை நியமிக்கலாம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகவியல்,ெபாருளியல், பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த ஆசிரியர்கள் பெற்றோர் -ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பி மாதம் ஒன்றுக்கு ரூ7500 என தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும். இதன்படி சென்னை மாவட்டத்தில்  14, திருவள்ளூர் மாவட்டத்தில்  106, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  77 உள்பட மொத்தம் 1474 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

4 comments:

  1. coimbatore ila evvalavu vacancy

    ReplyDelete
  2. இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி