சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2018

சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணிநியமன ஆணை வழங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



தமிழகத்தில், டிஆர்பி மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

விருதுநகர், ஆமத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த 322 பதின்ம பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டை யன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவிலே முதன் முறையாக தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை யூடியுப் முறையில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் தேர்வாணையம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத (அக்.) இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

மேலும், பள்ளிகளில் காலியாக உள்ள1,942 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர்கழகம் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளில், 70 சதவீதம் ஆசிரியைகள் பணி புரிவதால் பிரசவ காலங்களில் ஏற்படும் விடுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்கள் கல்வி திறன் பாதிக்காதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.இதற்கு மாற்றாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக ( யூகேஜி. எல்கேஜியாக) மாற்றி குழந்தைகளுக்கு சிறப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஒரு காலத்தில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கடினமான சூழ்நிலை இருந்தது.ஆனால், தற்போதைய அரசு, உங்களை தேடி வந்துஅங்கீகாரம் தருகிறது. பதின்ம பள்ளிகளுக்கு இன்று குரு பெயர்ச்சி.மேலும் அரசு பள்ளிகளுக்கும், அதிமுக அரசுக்கும்எப்போதும் குரு உச்சம் தான். அக்டோபர் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சூழ்நிலையை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றார் அவர்

8 comments:

  1. இதுவே இறுதியாக இருக்கட்டும்...
    இறைவன் மிக பெரிய காரியங்களை செய்வnர்...

    ReplyDelete
  2. தெய்வமே சொல்லாதிங்க செய்துமுடியுங்கள் விரைவில்

    ReplyDelete
  3. தேர்வு பட்டியலை முதலில் வெளியீடு செய்யலாமே ஐயா!

    ReplyDelete
  4. What about case status? Anyone know about this?

    ReplyDelete
  5. appa pothum pa irukura velaiya vittutu result late anathunala velaiyum kidaikama nalla polapu da

    ReplyDelete
  6. Trb special teacher selection list இப்போது வெளியீடு செய்தால்தான் வேறு இடத்தில் இருந்து பணி புரிபவர்களுக்கு கஷ்டம் இல்லாமல் இருக்கும்.இதில் எத்தனை பேர் பணி புரியும் இடத்தில் உன்மை சான்றிதழை கொடுத்து வேலை செய்கிறார்கள் தெரியுமா?.அவர்களை யோசித்து பாருங்கள்.

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்😂

    ReplyDelete
  8. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர்கள் சார்பாகவும் தேர்வு எழுதி பணி நியமன ஆணைகளை எதிர் நோக்கி ஓராண்டு காலம் முடிந்த நிலையில் காத்துக் கொண்டு இருப்பவர்கள் சார்பாகவும் மணமார்ந்த நன்றி களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் தாமதிக்காமல் உடனே இருதிப்பட்டிய ல்வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வரவேண்டும். பல்வேறு இன்னல்கள் அனுபவித்து மாவட்ட பதிவு மூப்பு என்று இருந்தது மாநில பதிவு மூப்பாக மாற்றியமைத்து பின்னர் அதையும் மாற்றி போட்டி தேர்வுதான் என்று அறிவித்தது. அதையும் ஏற்றுக் கொண்டு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி ஓராண்டு காலம் இழுத்தடிப்பு செய்து இன்றுவரை தொடர்ந்து செய்திதாள்களில் செய்தி கள்மட்டும் தினந்தோறும் வெளிவந்த நிலையில் உள்ளது. நீண்ட காலமாக 2012ல் இருந்து நிரப்பப் படாத நிலையில் சிரப் பாசிரியர் களின் அவல நிலை நீடித்து வரும் நிலையில் கருணை உள்ளம் கொண்டு கால தாமதமின்றி பணி ஆணை வழங்கி அவர்களின் வாழ்க்கை சிறக்க வழிவகை செய்யும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளி கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி