அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸைஅறிவித்த முதலமைச்சர்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2018

அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக தீபாவளி போனஸைஅறிவித்த முதலமைச்சர்.!


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஊக்க தொகை அறிவிக்கப்படும்.

அவ்வகையில், புதுச்சேரி மாநில அரசில் இருக்கும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு 6 ஆயிரத்து 908 ரூபாய் தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு துறைகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு 1,184 ரூபாய் போனசாக வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக 18 கோடி ரூபாய் செலவாகும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பொதுத்துறை ஊழியர்களுக்கான உற்பத்திசார்ந்த போனஸ் தொகை மத்திய அரசு அறிவிக்கும் விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

4 comments:

  1. Replies
    1. Tamilnadu Government - All Matters - Varum Aanaal Varaathu....

      Delete
  2. தொழிலாளருக்கு தான் போனஸ், ஊழியர்களுக்கு தர வேண்டும் என்று கட்டாயம் கிடையாது எப்ப பாரு பணம், பணம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி