காய்ச்சல் அறிகுறி இருக்கும் மாணவர்கள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும்:மாவட்டக் கல்வி அலுவலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2018

காய்ச்சல் அறிகுறி இருக்கும் மாணவர்கள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும்:மாவட்டக் கல்வி அலுவலர்


*பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல்அறிகுறி இருந்தால் அதுகுறித்த விவரத்தை உடனே வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன்  அறிவுறுத்தினார்.

*அரக்கோணம் நகராட்சி போலாட்சியம்மன் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த அரக்கோணம் வட்டார அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்  நடைபெற்றது.

*கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசியதாவது.

*டெங்கு காய்ச்சல் வராதபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது.

*பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் பள்ளிக் கட்டடம், மாடிப்பகுதிகள் மிகவும் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். தேவையில்லாத பொருள்களை வெளியில் வைக்க வேண்டாம்.

*அவை மழையில் நனையும் போது அதில் கொசு உருவாகலாம். இதில், தலைமை ஆசிரியர்கள் அதிக கவனம்கொள்ள வேண்டும்.

*3 நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்தும், காய்ச்சல் அறிகுறி தென்படும் மாணவ, மாணவிகள் குறித்தும் தகவல்கள் வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

*மாணவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் இருப்பது மாணவர்கள் வாயிலாக தெரியவந்தாலும் சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்தலாம்.

*முக்கியமாக மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அன்றாடம் தெரிவித்து அவர்களின் மனதில் பதியவைக்க வேண்டியதும் முக்கியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி