மாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2018

மாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி கல்வித்துறையில் அறிமுகம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அரசு மகளிர் பள்ளிகளில் மாணவி கள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டை பி.என்.தவான் ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற் றது. இதில், பள்ளிக்கல்வி அமைச் சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 257 பள்ளிகளின் நிர்வாகி களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார். அவர் நிகழ்ச்சிநடைபெற்ற மேடையை விட்டு இறங்கி நிர்வாகிகள்அமர்ந் திருந்த இடத்துக்கே சென்று ஆணையை வழங்கியதை அனை வரும் பாராட்டினர்.அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘அங்கீகாரம் இல் லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலனை கருத்தில்கொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம்.

இதுவரையில் 1,183 பள்ளிகளுக்கும், தற்போது 257 பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் 412 பள்ளிகளுக் கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்றார்.நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மெட்ரிக்குலேஷன் பள்ளி கள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குநர் உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் எஸ்.திருவளர்செல்வி (சென்னை), ஆஞ்சலோ (காஞ்சிபு ரம்), தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச் சர் செங்கோட்டையன் நிருபர்களி டம் கூறியதாவது: மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்கள் பள்ளிக்கு வந்து செல் வதை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் செயல் படுத்த உள்ளோம்.

‘ஆர்எப்ஐடி’ தொழில்நுட்பம் :

தற்போது சோதனை அடிப் படையில் சென்னை போரூர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதி மூலம் தங்கள் குழந்தைகள் எப்போது பள்ளி சென்றனர். எப்போது அங்கிருந்து புறப்பட்டனர் என்பதை பெற்றோர் செல்போன் எஸ்எம்எஸ் தகவல் உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இதில் ‘ஆர்எப்ஐடி’ என்ற தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம் முழுவ தும் சுமார் ஆயிரம் அரசு மகளிர் பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி