அரசுப்பள்ளியில் ஐ.நா. தினம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2018

அரசுப்பள்ளியில் ஐ.நா. தினம்!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி   கல்விமாவட்டத்தில் உள்ள சுளிஒச்சான்பட்டி  அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் ஐக்கிய  நாடுகள் சபை தினம் இன்று (24/10/2018, புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.

 உலக அமைதி, பாதுகாப்பு, உலக நாடுகளின் நட்புறவுகளை மேம்படுத்துதல்  மற்றும் பொருளாதாரம், சமூக நலத்திற்கான ஒத்துழைப்பு ஆகிய .ஐ.நா வின் முக்கிய கொள்கைகளை மாணவா்களுக்கு உணா்த்தும் விதமாக இன்று ஐ.நா. தினம் சமூக அறிவியல் மன்றம் சாா்பாக  கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் திரு வி.ச.நவநீதகிருஷ்ணன் அவா்கள் தலைமை தாங்கினாா்.  பெற்றோா் ஆசிரிய கழக தலைவா் திரு மகேஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் திருமதி இராணியம்மாள்  ஆகியோா் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனா். மாணவ மாணவிகளுக்கு உலக அமைதி மற்றும் பாதுகாப்பு தொடா்பான சொற்பொழிவுகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள மாணவ மாணவிகளுக்கு இந்நிகழ்ச்சி உறுதுணையாக இருந்தது. இறுதியாக சமூக அறிவியல் பாட ஆசிரியா் திரு. யோகராஜ் அவா்கள் நன்றியுரை கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி