சிறப்பாசிரியர் பணி - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொறுப்பை, CEO,க்களிடம் ஒப்படைக்க, TRB முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2018

சிறப்பாசிரியர் பணி - சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொறுப்பை, CEO,க்களிடம் ஒப்படைக்க, TRB முடிவு!


சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொறுப்பை, முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம் ஒப்படைக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளிகளில், 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக,2017ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மூன்று மாதங்களுக்கு முன் முடிந்து, சமீபத்தில், தேர்வு முடிவு வெளியானது.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பல்வேறு தேர்வர்களின் கல்வி தகுதி ஏற்கப்படவில்லை என்ற, புகார் எழுந்தது. இதுதொடர்பாக, டி.ஆர்.பி., அலுவலகம் முன், தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். பலர், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு, இந்த தகவலை விளக்கமாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

இந்த மறுசான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., மேற்கொள்ளாமல், மாவட்ட சி.இ.ஓ.,க்கள் வழியாக நடத்த, முடிவு செய்துள்ளது. எனவே, சான்றிதழில் குழப்பம் ஏற்பட்டு, நீதிமன்ற வழக்கு வந்தால், அதை, முதன்மைக் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்ள அதிகாரம் வழங்கவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

33 comments:

  1. Replies
    1. இறுதி உத்தேச பட்டியலை தயாரித்து வெளியிடட்டதது TRB தானே அதுவும் TRB யின் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவே இல்லாத தேர்வர் களின் அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி ஒரு சிலரிடம் அதை யாரோ ஒருசில தனியார் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு இல்லாத ஒரு நிபந்தனையை கூறி தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் பெயர் இடம்பெறாமல் TRB யின் அறிவிப்பு குரிப்பானையை பின்பற்றாமல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இது தேர்வர்களின் சரியான குற்றச்சாட்டு இதற்கு நீதிமன்றங்களுக்கு சென்றால் TRB தான் பதில் சொல்ல வேண்டும். உத்தேச பட்டியலை வெளியிட்டது TRB தானே வெளியிட்டது. தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் பயிற்சியில் பயின்று தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லாத ஒரு சான்றிதழை காரணம் காட்டி அதற்காகவே மற்றவர்களும் வாங்கியிக்ருகலாமே என்று உத்தேச பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் தங்க மாரி அவர்கள் கூறுவது வேடிக்கைக்குறியது. இதை ஏன் இவர் பரிந்துரை செய்கிரார்.குறிப்பானையின்படி சான்றிதழ் உள்ளதா என்று மட்டுமே அவர் பார்க்க வேண்டுமே தவிர குறிப்பானையிலும் அழைப்பு கடிதத்திலும் இல்லாத ஒரு விஷயத்தை அவர் வலியுறுத்த என்ன காரணம் அப்படியானால் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து அடுத்த நிலையில் உள்ளவர்கள் என்ன முட்டால்களா? நீதிமன்றங்களுக்கு தேர்வு எழுதியவர்கள் சென்றால் TRB பதில் சொல்ல வேண்டும்.

      Delete
  2. Indha murai kularupadi nadaka vaypu ellai

    ReplyDelete
  3. போலி நபர்களை கண்டுபிடிக்க சரியான வழி

    ReplyDelete
  4. 27 today. But Tet xam varuthu varuthunu Twitteril sonnar minister but. Varavilla. Enna minister neea sonna pathivu Ellam. Verum poluthu pokka? Pls pls dnt aging said this like

    ReplyDelete
  5. Pg asst.posting eppappa varum.pl.sollunga

    ReplyDelete
  6. ஓவ்வொரு மாவட்டத்திலும் 1:2 என்ற முறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக இறுதி பட்டியல்கள் வெளியீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்லாவிட்டால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் இல்லாத விதி மீறல்கள் நீதி மன்றம் மூலமாக பாதிக்கப்பட்ட அனைத்து தேர்வர் காலும் அம்பலப்படுத்ததப்படும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உணர்ந்து செயல்பட வேண்டும்.ஏற்கணவே குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உறுதி அளித்தார்.அதன்படி சிறப்பாசிரியர் விஷயத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் செய்தது போல் இதையும் நாசமாக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான குறிப்பானைகளை முறையாக இணையதளத்தில் வெளியீடு செய்தது போல் நேர்மையான முறையில் ஓவிய பாடப்பிரிவில் (free hand out line model drawing ) என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் என்று போலியான ஒரு விதியை நீக்கம் செய்து மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பட்டியலில் முறைகேடாக நுழைந்து உள்ளவர்களின் பெயர்களைக் நீக்கம் செய்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்யா விட்டால் நீதிமன்றங்களுக்கு சென்று தான்TRB பதிலளிக்க வேண்டும்.ராஜ்குமார் அவர்கள் சுட்டிக் காட்டி யுள்ள தகவல்கள் அனைத்தும் கவனிக்க வேண்டியது அவசியம் .....

    ReplyDelete
  7. வெங்கடேஷ்வரா டெட் தாள் 1 மற்றும் தாள் 2/டி.என்.பி.சி மெட்டிரியல்ஸ் புதிய பாடதிட்டத்தின் அடிப்படையில் எளிமையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. வினா வங்கி கிடைக்கும்.ஆங்கிலம் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.Handwritten materials with detailed explanation மேலும் தகவல்களுக்கு 9384375868

    ReplyDelete
  8. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து தேர்வர்களும் ஒரு முறை தங்கள் அழைப்பு கடிதத்தை எடுத்து படித்துப் பாருங்கள்.அதில் உள்ள கடைசி பாய்ன்ட் என்னவென்றால் சான்றிதழ் நகல் அனைத்தும் குறிப்பானையில் உள்ள படி என்பதை கவனியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் CEO க்கள் அதனை சரிபார்க்கவில்லை.....
      TRP சரியாக பயிற்ச்சி கொடுக்கவில்லையா...
      நாம் 10th சான்றிதழ் அன்று கோடுக்காமல் இப்போது கொடுத்தால் ஏற்றுகொள்வார்களா....
      அவர்கள் செய்ய தவறியதை தேர்வர்களின் தவறு என குற்றம் சாட்டுகின்றனர்....இதுதான் உண்மை....

      Delete
  9. மீண்டும் சான்றிதழ்சரிபார்பு

    ReplyDelete
  10. If anybody have group for special teachers, pls add my number 9843987391

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. டிஆர்பி வெளியிட்ட அறிக்கையை முழுமையாக படிக்காதவர்கள் இந்த குளருபடிக்கு காரணமாகின்றனர்

    ReplyDelete
    Replies
    1. TRB அறிக்கையே குளறுபடிதான் நன்பா...

      Delete
  13. Trb apadi solavae Ella... yapadi news vanthathu...who say this....

    ReplyDelete
  14. தமிழ்வழிக் கல்வி சான்று கல்விநிறுவனங்களில் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுத்துறையில் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. Higher grade என்பது தனிதேர்வு.....அவர்கள் எங்கு வாங்க வேண்டும்....Trb யின் பதில்....???????

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. அறிவுக்கு பொருத்தமற்ற பதிவுகளை இடவேண்டாம் குறிப்பானையில் எந்த இடத்திலாவது ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறதா? மேலும் தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் நிறுவனங்கள் மூலம் வாங்க வேண்டும் என்று குறிப்பிடபட்டிறுக்கிறதா.சிந்தித்து பதிவு இடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அறிவு சார்ந்தவர்கள் புரிதல் சார்ந்தது

      Delete
  17. பத்தாம் வகுப்பு தனியார் பள்ளியில் பயின்றவர்கள் சான்று தேர்வுத்துறையிலா பெற்றிருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. பத்தாம் வகுப்பு சான்றிதழில் அந்த பள்ளியின் பெயர் இருக்கும்....அப்படியிருந்தால் மட்டுமே அந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார்.....Higher grade சான்றிதழ் விசயத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை....???TRB யின் சரிபார்ப்பு இவ்வளவு லட்சனமா....First trb accept the mistake....

      Delete
    2. மேலும் இதந்த சான்றிதழை அரசு தேர்வு துறை வழங்காது என தெரிந்தும் CV யின் போது ஏன் இது பற்றி கேட்கவில்லை....இதை தேர்வர்கள் அனைவரும் வைத்திருந்து ஒருசிலர் வைக்காவிட்டால் தேர்வர்களின் தவறு....அரசு வழங்காத TRB கேட்காத சான்றை இப்போது கேட்பது எந்த விதத்தில் நியாயம்.....யாருக்கும் தெரியாத இந்த சான்றிதழ் விசயம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது.....அதுவும் போலியான முறையில்....

      Delete
  18. தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் ஓவிய பயிற்சி நிறுவனம் குறித்து அரசிடமிருந்து ஏதேனும் வரைமுறை உண்டா ஓவியம் வரையும் ஆற்றல் படைத்த யார் வேண்டுமானாலும் யாருக்கும் எந்தமொழியிலும் ஓவிய பயிற்சி அளிக்கமுடியும் என்பதை படிக்காத பாமரமக்களுக்கும் தெறிந்த உண்மை உதாரணமாக தாரமங்கலம் ஸ்டீபன் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பயிற்சி அளித்தார்.அவர் இப்போது உயிரோடு இல்லை இந்நிலையில் அவரிடம் பயின்று free hand outline model drawing higher greade முடித்தவர்கள் யாரிடம் சான்றிதழ் பெற்றிருக்க முடியும் அப்படி எந்த தனியாரிடம் தமிழ் வழி சான்றிதழ் வங்கியிருந்தாலும் அதை செல்லும் என்று TRB யின் குறிப்பானையில் சுட்டி காட்டப்பட்டுள்ளதா.TRB நீதிமன்றங்களுக்கு சென்று விளக்கம் அளிக்க தயாரா?. யாரை ஏமாற்றும் வேலை இது.எதற்காக இப்படி ஒரு பித்தலாட்ட வேலை அப்படி வேண்டுமானால் தமிழ் வழி சான்றிதழ் வழங்க தடுக்கி விழுந்தால் ஆயிரம் தனிநபர்கள் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர் யாரிடமும் வாங்கி வந்தாலும் அதை செல்லும் என்று TRB அறிவிப்பு குரிப்பானையில் தெளிவு படுத்தி இருந்தால் அது ஒன்றும் பெரிய பல்கலைக்கழக சான்றிதழ் அல்ல TRB தன் தவறை ஏற்று அனைவருக்கும் மறு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக இறுதி பட்டியல்கள் வெளியீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு மேல் தேர்வர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது.சிந்தித்து செயல் படுங்கள்.ராஜ்குமார் போன்ற தலைவர்களை திட்ட வேண்டாம்.சிந்தியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை ராஜ்குமார் தேர்வாகி இருந்தால்??????

      Delete
  19. ராஜ்குமார் தேர்வாகி இருந்தால் 1325 பேரும் இரண்டு மாதங்கள் சம்பளம் பெற்று சந்தோஷமாக இருந்திருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் சரியான பதில் நன்றி....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி