Part time ல் - ஆசிரியர்கள் M.phil பயில பெரியார் பல்கலை கழகம் மறுப்பு - அறிவிப்பை ரத்து செய்ய தேர்வர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2018

Part time ல் - ஆசிரியர்கள் M.phil பயில பெரியார் பல்கலை கழகம் மறுப்பு - அறிவிப்பை ரத்து செய்ய தேர்வர்கள் கோரிக்கை!


Part time ல் - M.phil பயில பெரியார் பல்கலை கழகம் மறுப்பு.

அனுப்புதல்
         XXX
        முதுகலை பட்டதாரி ஆசிரியர்
        அ.மே.நி.பள்ளி
        வேலூர் மாவட்டம்

பெறுநர்
        உயர்திரு உயர் கல்வித்துறை அமைச்சர்
       உயர் கல்வி துறை அலுவலகம்
       சென்னை

ஐயா,

பொருள்: நான் பெரியார் பல்கலை கழகத்தில் பகுதி நேரத்தில் M.phil படித்தல் சார்பாக

     நான் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்போது வேலூர் மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் உயர் கல்வி (M.phil) பயில பெரியார் பல்கலை கழகத்தில் விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதினேன். பிறகு அதன் உறுப்பு கல்லூரியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் M.phil part time (Physics) பயில விண்ணப்பித்து பிறகு நேர்காணல் கலந்து கொள்ள சென்றேன். நேர்காணல் முடிந்தது, அப்போது தான் இவர்கள் ஒரு அறிவிப்பை தெரிவிக்கின்றனர். என்னவென்றால் பெரியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பயில முடியும் என்று சொல்லி விட்டு , தேர்வு பட்டியல் பல்கலை கழகத்திலிருந்து வரும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த அறிவிப்பை விண்ணபிக்கும் முன்பே வெளி விட்டிருந்தால் நாங்கள் 1. நுழைவு தேர்வு விண்ணப்பித்திருக்க மாட்டோம்,
2. நுழைவு தேர்வு எழுதி இருக்க மாட்டோம்,
3. அதன் உறுப்பு கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க மாட்டோம்,
4. நேர்க்காணல் கலந்திருக்க மாட்டோம்,
ஆணால் வேலூர் மாவட்டத்தில் பணி புரிபவர்கள் தர்மபுரி (அ) கிரஷ்ணகிரி மாவட்டத்தில் பயில முடியாது என்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் நான் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவன். இதனால் மிகுந்த மண உலைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

இதுவரை பல்கலை கழகத்தில் இருந்து தேர்வு பட்டியல் வெளிவிடவில்லை. ஆகவே இந்த புதிய அறிவிப்பை ரத்து செய்து தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் உயர்கல்வி பயிலலாம் என்பதனை அறிவிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

       நன்றி


                             இப்படிக்கு
                 தங்கள் உண்மையுள்ள
                 XXX

இடம் : தர்மபுரி
தேதி : 27-10-2018

3 comments:

  1. பெரியார் பல்கலை என்ன லண்டன்லியா இருக்கு????????

    தமிழ்நாட்டில் தானா இருக்கு அப்பறம் என்ன முட்டால் தனமான ஒரு அறிக்கை....
    தமிழக ஆசிரியர் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. இப்போ எல்லாம் முடிஞ்ச அளவுக்கு பகுதி நேர மற்றும் தொலைநிலை பட்டங்களை அருகாமையில் இருக்கும் பல்கலையில் விண்ணப்பிக்கவும், அருகாமை என்பது நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்களோ அங்கு, எந்நேரம் வேண்டுமானாலும் கொள்கைகள் மாற்றப்படலாம், ஏற்கனவே தொலைநிலை கல்வி கல்வி ஆணையம் வேறு மாநிலத்தில் தமிழக பல்கலைகள் தங்களது சென்டர்களை வைக்க கூடாது என அறிவித்தது, பாரதியார் பல்கலை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது, அவர்கள் வெளிநாட்டில் கூட சென்டர்கள் வைத்து இருந்தனர், ஆனால் அந்த பல்கலை கழகம் அந்த அறிவிப்பை மதிக்கவில்லை,ஆனால் பாதிக்க படுவது மாணவர்களே, முடிந்த அளவுக்கு உங்களுது அருகமையில் உள்ள பல்கலை கழகத்தில் சேர்ந்து படியுங்கள், பிறகு வருத்தப்பட வேண்டாம், இங்கு சேர்க்கவில்லை என்பது பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் படித்த டிகிரி வீணாய் போனால் என்ன செய்வது,

      Delete
  2. நான் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் M.phil சேர 2015 ல் நுழைவுத்தேர்வு எழுதினேன் எனது முதுகலைத்தமிழ் மதிப்பெண் தாள் மனோன்மணியம் பல்கலைக்கழகம் இன்னும் யாருக்கும் கொடுக்கவில்லை ஆதலால் கொடத்தவுடன் நான் சமர்ப்பிக்கிறேன் சேர்க்கை உறுதி செய்யவும் என கடிதம் எழுதி கொடுத்தும் எனது சேர்க்கை நிகாரிப்பு செய்தார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி