TNPSC - பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2018

TNPSC - பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை!


மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

4 comments:

  1. கூட்டுற வேலைக்கே அப்ளை பண்ணிட்டு இருக்காங்க, இதுல போய், வேலைய பாருங்க ஜி, ஏற்கனவே SSC Scientific Asst எக்ஸாம்ல எஞ்சினீரிங் பட்டதாரிகளுக்கு சாதகமா கோர்ட்ல தீர்ப்பு சொல்லிட்டாங்க, ஒரு வேலைக்கு 3 வருஷம் தான் குறைந்த பட்ச (டிகிரி அல்லது டிப்ளோமா) கல்வி தகுதின்னு சொன்னா நாலு வருஷம் படிச்சவனுக்கு அதுல தகுதி இருக்கு, என்னானா குறைந்த பட்சம் தான் 3 வருஷம், மேல எத்தன வருஷம் வேணாலும் இருக்கலாம், யாரும் தடை போட முடியாது, B.E/B.Tech ஜெயிச்சுட்டாங்க, போஸ்டிங் கூட வாங்கிட்டாங்க,

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பாஸ், நாங்களும் non என்ஜினியர்ஸ் தான், அந்த தீர்ப்பாள பாதிக்க பட்ட ஆளு, சயண்டிபிக் ஆபிசர்ஸ்க்கு ஏன் என்ஜினியர்ஸ செலக்ட் பண்ணனும், காரணம் இப்போ எல்லாம் தெருவுக்கு பத்து பேரு பி.இ முடிச்சவன் இருக்கான், அவனுக்கு அரசு வேலைல இடம் குடுக்கலன எவனும் அங்க சேர மாட்டான், எல்லாமே அரசியல் தான், நாங்களும் தேர்தலுக்கு தான் வெயிட் பண்றோம், ஆனா வெக்கம் கெட்ட மக்கள் இன்னும் நாட்டுல உசுரோட தான் இருக்காங்க, காசு வாங்கிட்டு அவங்களுக்கு தான் ஒட்டு போட போறாங்க,

      Delete
  2. Nadam nattu makkalum nasmai pogattum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி