10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2018

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து!



வரும் 2019-20 கல்வி ஆண்டு முதல் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு, அதைத்தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வில் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வையும், அதைத் தொடர்ந்து நடக்கும் சிறப்பு உடனடித் தேர்வையும் மாணவர்கள் எழுத விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி