Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 - தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 - தமிழ் அல்லது மொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்; 18ல் விருப்ப பாடம்; 19ல், அறிவியல்; டிச., 22ல், சமூக அறிவியல்பிளஸ் 1 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி; 17ல், இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 22 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்பிளஸ், 2 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்விடிச., 17 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்; டிச., 22 - வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்.இவ்வாறு தேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23 முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும். ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives