உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2018

உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!


நெல்லை சேரன்மாதேவியில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 13 பேர் கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை சேரன்மகாதேவி பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததால் 25-க்கும் மேற்பட்ட சிறுவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் 7 இளைஞர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 தடையை மீறி செயல்படுதல், 285 அரசாணையை மீறி செயல்படுதல், 291பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளின் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்த்தில் 29 பேர் மீது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரைவும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி