பயோமெட்ரிக் - 1.63 லட்சம் ஆசிரியர்களுக்கு, 'செக்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2018

பயோமெட்ரிக் - 1.63 லட்சம் ஆசிரியர்களுக்கு, 'செக்'


அரசு மற்றும் அரசு உதவி பெறும், 8,000 பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களை கண்காணிக்க, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

'அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், சரியாக பணிக்கு வருவதை கண்காணிக்கும் வகையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு திட்டம் அமல்படுத்தப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.திட்டத்தை நிறைவேற்ற, தமிழகமின் மேலாண்மை மற்றும் தேசிய தகவல் தொடர்பு மையத்தின் வழியாக, பயோ மெட்ரிக் திட்டத்திற்கானசெயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை நிறைவேற்ற, 15.30 கோடி ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து, அதற்கான அறிக்கையை, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பினார்.

அறிக்கையை ஆய்வு செய்து, திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், 9 கோடி ரூபாயும், மீதி தொகை அடுத்த நிதி ஆண்டிலும் வழங்கப்படும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை மற்றும் 4,040 மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும், 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, மின்னணு பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படும்.இந்த வருகை பதிவு, தமிழக அரசின் கல்வி மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் சேகரித்து வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 comments:

  1. இதுல என்னடா செக். அவன் அவன் வேலைய பார்க்குறதுக்கு. எல்லா அரசு துறைகளிலும் கொண்டு வர வேண்டும்

    ReplyDelete
  2. நீங்க என்ன செக் வச்சாலும் வகுப்புக்கு செல்லாமல் வகுப்புக்கு வெளியே மரத்தடியில் ஊர்கதை பேசி பொழுதைப் போக்க நினைப்பவர்களுக்கு என்ன செக் வைக்கமுடியும்.

    ReplyDelete
  3. எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்காம துரிதமாக வேலை செய்ய செக் செய்ய வேண்டாமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி