அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2018

அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.


தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டுமுதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், 'சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கப்பட உள்ளது.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

3 comments:

  1. எவ்வாறு விண்ணப்பிப்பது? எப்படி தேர்வு நடைபெறும்?

    ReplyDelete
  2. அப்ப தனியார் பள்ளி ஆசிரியர்கள் போலி ஆசான்களா... ஒரே தேசம் ஒரே நாடு... ஏன் இந்த பாகுபாடு....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி