தேனிமாவட்ட ஆசிரியா்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 2 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கி அசத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

தேனிமாவட்ட ஆசிரியா்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 2 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கி அசத்தல்!



தேனிமாவட்ட ஆசிரியா்கள் மற்றும் நண்பர்கள்  மனமுவந்து Whatsapp ல் பதிவிட்டு இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான நீங்கள் கொடுத்த  நிவாரணப்பொருட்களை
 *நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட கடைக்கோடி கிராமங்களான  தலைஞாயிறு, வடூகூர், மற்றும் வேட்டக்காரன்புதூர்* ஆகிய இடங்களில் கஜா புயலால் தன் இருப்பிடைத்தையும், வாழ்வாதரத்தையும் இழந்து நடு தெருவிற்கு நின்று பசிக்கு சோறு போடுங்கள் என்று மக்கள் கேட்கும் நிலையை  கஜா புயல் உருவாக்கியது.

 நிவாரணப்பொருட்கள்  கொண்டு செல்ல சாலைவசதிகளும் இல்லை. மின்சாரம்  இல்லை. குளத்துநீரை பருகு முகாம்களில் முதியோர்கள்,பெண்கள்,
கைக்குழைந்தைகள் தங்கியிருந்தார்கள்.

நண்பர்களின் துணை கொண்டு நீங்கள் அளித்த சிறிய  நிவாரணப்பொருளும்  மேற்கண்ட கிராமங்களில் எங்கள் குழு கல்லூரி இளைஞர்கள்  நடந்து சென்று உரியவர்க்கு கொடுத்தனர்.

இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் 

 *ஏழை ,பணக்காரன், உயரந்தவன், தாழ்ந்தவன், மாடி வீடு, குடிசைவீடு* ,
*வலிமையான  மரம், வலுவற்ற மரம்,*
 *உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி*
, *அழகானவன், அழகற்றவன்,*
 *நல்லவர், கெட்டவர்*
 *நன்றியுள்ளவர்,நன்றி கெட்டவர்*

போன்ற வேறுபாடு இயற்கைக்கு கிடையாது..

 *மனிதனை மதிப்போம்*
 *மனித நேயத்தை காப்போம்*
இது
இயற்கை சீற்றங்கள் நமக்கு கற்றுதரும் வாழக்கை பாடம் .

நம் குழைந்தைகளுக்கு உதவ கற்றுக்கொடுப்போம்..

மனித நேயம் வளர.........

வடூகூர் கிராமத்தில் 200 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரணப் பொருட்கள் கொடுத்துவிட்டு விடைபெற்ற போது பொதுமக்கள் அனைவரும் நன்றி கூறி வழியனுப்பிய வைத்தனர்..

Whatsapp ல் பதிவிட்ட இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் வழங்கிய  தேனி மாவட்ட ஆசிரியர்கள் ,& நண்பர்கள் மற்றும் பொதுமக்கள்  அனைவருக்கும்
 *நன்றிகள் பல கோடி*


4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி