ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள் நாளை மறுநாள் அனுப்புகிறது இஸ்ரோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2018

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள் நாளை மறுநாள் அனுப்புகிறது இஸ்ரோ


ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்களை ஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ நாளை மறுநாள் அனுப்புகிறது.

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹிஸ்சிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும்.இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 என்ற ராக்கெட்டில் இஸ்ரோ நாளை மறுநாள் காலை 9.59 மணிக்கு அனுப்புகிறது. இவற்றில் 23 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை.

டிச.4ல் ஜிசாட் செயற்கைக்கோள்
அடுத்ததாக இஸ்ரோவின் ஜிசாட்-11 என்ற 5.7 டன் எடையுள்ள வர்த்தக செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் டிசம்பர் 4ம் தேதி ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் 40 கு-பாண்ட் மற்றும் கா-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இதன் மூலம் வினாடிக்கு 14 ஜிகாபைட் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் இந்தியாவில் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி