மீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2018

மீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்! வெளியான முக்கிய தகவல்!


ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.

குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளை எக்காரணத்தை கொண்டும் மூடக் கூடாது என்பது குறித்து இந்த அமைப்பு தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்.

17 comments:

  1. நல்லவேளை என் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். போராடுபவர்களுடைய பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா

    ReplyDelete
    Replies
    1. It's right Kaja puyal la avan avan theruvuku vanthutan ivanga vangara Sampalam pathala nu varanga

      Delete
    2. Sampalam pathala nu poradala.. old pension kaga tha main a poratamay. Engalukku ipo kudukira sampalamay pothum.. Thayuvu seithu poratathai kochai paduthathirkal. .

      Delete
    3. போராட்டம் என்பது அரசு ஊழியர்களி்ன் குறைகளையும், உரிமைகளை உறங்கச் சொல்லும் ஒரு வழி.
      அந்த வழியில்
      1.வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் போராடலாம்.
      2.மனிதசங்கிலியை சாலையின் ஓரத்தில் அமைத்து போராடலாம்.
      3.உங்களின் கோரிக்கைகள் உங்களுக்காக மட்டும் இன்றி அரசுப் பள்ளிகளில் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை மும் முதன்மை படுத்தி இருந்தால் பொதுமக்களும் உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள்

      Delete
    4. I agree private school Mela nampikai vara vacharathinga Aprm government schools illama poidum porattam makkalin asiriyar meethu irukum nampikaiyai udaithu Vida kudathu porattam manavargalai pathika villai endral makkalum udan iruppar

      Delete
  2. Govt jobla unnala seramudiyalala.. .
    Please keep quiet...
    Govt employees announced one day salary (80crore)
    What you do?

    ReplyDelete
  3. One day thana Anna

    One month salary kudutha maathiri solluringa

    Avanga ellarum namma brothers and sisters

    Avangaluku namma than help pannanum

    Athu namma responsibility

    ReplyDelete
  4. பாதுகாப்பாக உள்ளவர்கள் மேலும் மேலும் பாதுகாப்பாக இருக்க நினைக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு அற்றவர்கள் மேலும் மேலும் பாதுகாப்பு அற்றவர்களாக இருக்கிறார்கள்

    ReplyDelete
  5. மாணவர்களின் படிப்பு பாதிக்காது. போராடுபவர்கள் தான் பாதிக்கபடுவார்கள். காருக்கு எம்பளம் போடும் அளவுக்கு வந்துவிட்டார்கள்

    ReplyDelete
  6. இந்த போராட்டத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்வது தப்பி தவறிகூட பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க கூடாது

    ReplyDelete
    Replies
    1. மிக சரி .மருத்துவம் பொறியியல் படிக்கவும் அரசு கல்லூரியில் சேர்க்க வேண்டாம்

      Delete
    2. மிக சரி .மருத்துவம் பொறியியல் படிக்கவும் அரசு கல்லூரியில் சேர்க்க வேண்டாம்

      Delete
  7. நான் இல்லையென்றாலும் வேலை நடக்கும் என்ற நிலையில் நான் என்ன போராட்டம் பன்னினாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்

    ReplyDelete
  8. Confirme this strike very big nosecut to ஜாக்டோ-ஜியோ so please wait ஜாக்டோ-ஜியோ confirme this time you get a endcard.

    ReplyDelete
  9. Nanbargale aasiriyargalin porattathai ilivu padutha vendam.sama velaiku sama oodhiyam vendum, pension kidaikka vendum enbathe ingu mukkiya kaaranam.arasu valangum sambalam engaluku adhigam than aanal engal sambalathai 2009 ku mun, pin ena pirippathu thavaru.yaaraiyum paathikaamal ikkalathil poradi neethi kidaikka pera iyalaathu. Manavargalai epdi paritchaiku thayar paduthu vathu enbathayum avargalin ethirkalathai paathukaapathu engal kadamai endrum ovvoru asiriyarum arivom.

    ReplyDelete
  10. கருத்து தெரிவிக்கும் அனைத்து நண்பர்கள் கவனத்திற்கு, முன்பிருந்தது போல் ஆசிரியப்பணி அவ்வுளவு சுலபம் கிடையாது. 50 அல்லது 60 வயதில் வரவேண்டிய BP, மன உளைச்சல் எல்லாம் இன்று 35 வயதிலேயே அவர்களுக்கு வந்து விடுகிறது. உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. மாணவனின் முன்னேற்றத்தில் எந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவனின் பெற்றோரும் பங்கு கொள்வதில்லை. அவர்கள் படும் பாட்டை உடனிருந்து பார்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி