கல்விக் கட்டண நிர்ணயம்: விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2018

கல்விக் கட்டண நிர்ணயம்: விண்ணப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு


கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்காத 2,200 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுயநிதி கல்விக் கட்டண நிர்ணயக் குழு  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 4,065 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், 6,663நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் என மொத்தம் 10,728 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்தப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை மூன்றாண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்க, தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி கல்விக் கட்டண நிர்ணயக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் குறித்து இக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியது:கடந்த 2017- 18, 2018-19, 2019-20 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் மொத்தம் 5,500 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மேமாதம், தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டணத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், விண்ணப்பம் செய்யாத பள்ளிகளைக் கண்காணித்து அவை விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.  அதன் பிறகும் விண்ணப்பம் செய்யாத பள்ளிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 2,200 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம்நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது.புகார்கள் மீது நடவடிக்கை: சென்னை, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 பள்ளிகளுக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையின் அடிப்படையில் விதிகளை மீறும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கட்டண நிர்ணயம் எப்படி?:

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் தங்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு, சுயநிதி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் விண்ணப்பித்த பின் அவற்றின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அவ்வாறு விண்ணப்பிக்கும் பள்ளிகளின் ஆண்டு வரவு -செலவுகள், பள்ளியின் அங்கீகாரம் (ஈபஇட) , அனுமதி போன்றவை சரிபார்க்கப்படும். இவற்றில் முக்கியமாக வரவு, செலவிற்கும், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி