டிஜிட்டல் முறையில் பாடம்: பள்ளிகளில் ஆய்வுக்கு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

டிஜிட்டல் முறையில் பாடம்: பள்ளிகளில் ஆய்வுக்கு திட்டம்


'தீக் ஷா' செயலி மூலம், கற்பிக்கும் பள்ளிகளை ஊக்கவிக்கவும், பாடத்திட்ட கருத்துக்கள் இணைப்பது குறித்த கருத்துக்கள் பெறவும், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும் என, கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், 'க்யூ.ஆர்.,' கோடு வாயிலாக, கற்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும்.இதோடு 'தீக் ஷா' செயலியில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கி வகுப்பு கையாளுதல், ஆன்லைன் தேர்வு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் பள்ளிகளில் செயல்படும் விதத்தை, தீக் ஷா திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளதாக, கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.'சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அரசு உருவாக்கிய, தீக் ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதை பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்கள் பெறவும், பள்ளிகளில் ஆய்வுமேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி