செமஸ்டர் தேர்வில் அதிரடி மாற்றம்! இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2018

செமஸ்டர் தேர்வில் அதிரடி மாற்றம்! இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!


மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க, ஒரு சில பாடங்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

அண்மையில் நடந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தேர்வு சீர்திருத்தக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் குறிப்பாக மாணவர்களுடைய மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது பொறியியல் மாணவர்களுக்கான ஒரு சில குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதும் புதிய திட்டத்தை அமல்படுத்துலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த புதிய திட்டம் 3 ஆம் ஆண்டு மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே.

இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டவில்லை. எனவே இந்த புதிய திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என கல்வித்துறை வட்டரங்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. Replies
    1. மிக அருமையான திட்டம்.கல்வியாளராகிய நான் இதை வரவேற்கிறேன். டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு அப்படித்தானே நடக்கிறது.அனைவரும் வரவேற்போம்.

      Delete
    2. துறை தேர்வுக்கு தகுதியான இளநிலை முதுநிலை பட்ட படிப்புக்கு நடக்குற தேர்வுகள் கூட அப்படி தான் நடக்குது,

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி