கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்:கலெக்டர் சுப்ரமணியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2018

கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்:கலெக்டர் சுப்ரமணியன்


கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என கலெக்டர் சுப்ரமணியன் பேசினார்

கள்ளக்குறிச்சியில் நடந்த அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது

கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரத்தை வரும் கல்வியாண்டில் சிறந்த மாவட்டமாக நிரூபிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் சிறந்து விளங்குகிறது

மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி கல்வி போதித்தால் சிறந்து விளங்க முடியும். அதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது

மாணவர்கள் முன்னேற ஆசிரியர்கள் பாதை அமைத்து தர வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு அதிகளவில் வர துவங்கியுள்ளனர். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும்.பள்ளி சிறந்து விளங்க தலைமையாசிரியர் பங்கு மிக முக்கியமானது

ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தர வேண்டும்.கல்வியில் விழுப்புரம் மாவட்டம் கடைசி என்பதை மாற்ற வேண்டும்

வரும் கல்வியாண்டில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயருவதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளிகல்வி மற்றும் மருத்துவ துறையில் விழுப்புரம் மாவட்டம் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்

5 comments:

  1. Many teachers transferred to other district by management transfer (???????)...then how result will increase ?????????????

    ReplyDelete
  2. Sekiram tet la pass pannavangaluku posting podungada

    ReplyDelete
  3. சில ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை, மேலும் சில ஆசிரியர் கள் பள்ளியில் கல்வி கற்று தருவதை விட. மற்ற வேலைகள் அனைத்தும் செய்கிறார்கள். ( வட்டிக்கு விடும் தொழில்) மாணவர்கள் மீது அக்கறை இல்லை இவர்களுக்கு.

    ReplyDelete
  4. ஆசிரியர் ஒத்துழைப்பை விட மாணவர், பெற்றோர் ஒத்துழைப்பு இருந்தால் தான் தேர்ச்சி சதவீதம் உயர்வு அடையும். தேர்வை ஆசிரியர் எழுதுவது இல்லை.

    ReplyDelete
  5. Collector sir Pg asst vaccines is high villupuram dist first fill and take action.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி