வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2018

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை


கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் வலு குறைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் திருச்சி, நாமக்கல்லிலும் கனமழை பெய்யும் என்றும், நவம்பர் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வங்கக்கடல் மீனவர்கள் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இன்று மதியம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் 80 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவு

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினத்தில் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டிடை, பேராவூரணியில் 16 செ.மீ. மழையும் நெய்வேலியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விருதாச்சலம், செங்கல்பட்டில் 12 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி