சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் - - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2018

சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் -


11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்தினார். இவருடன் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஸ்கில் ட்ரைனிங் என்ற நடைமுறை பயிற்சி விரைவில் பள்ளிகளில் அமல் படுத்தப்படும் எனவும் அதன் மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறினார்.

28 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பதிவுகளை இடும் அன்பு நன்பர்கள் அநாகரிகமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது இனிய உலவாக இன்னாத கூறல் கணியிருப்ப காய்கவர்ந்தற்று என்ற வள்ளுவர் பிறந்த தமிழ் நாடு யாகாவாராயினும் நாகாக்க! சிறப்பாசிரியர் நியமனத்தில் குறைகளை சுட்டிக் காட்டினால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.எதையும் பொருத்திருந்து பார்ப்போம் பொருமை கடலினும் பெரிது.கடந்த இரண்டு மாத காலம் பல்வேறுவிதமான சர்ச்சைகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆளாகியுள்ளது.இந்நிலையில் ஒவ்வொரு நிகழ்வும் உலவுத்துறையால் கண்டிப்பாக கண்காணிக்கப் பட்டு வருகிறது.ஆகவே ஆய்வக உதவியாளர் பணி நியமனம் போல் குளறுபடிகள் நிகழாத வண்ணம் பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தேர்வர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான பதிவு

      Delete
    2. அருமையான பதிவு

      Delete
  3. ஐயா இந்த வாரம் tet அறிவிப்பு வரும் சொன்னிக ஆனால் நாளை இந்த வாரத்தின் கடைசி வேலை நாள் TETவரும் மா வராத
    Anybody reply please

    ReplyDelete
    Replies
    1. Ha..ham.ha..ha..namma minister solli eppo nadanthieukku.???????

      Delete
  4. அனைத்து குழப்பங்களையும் நீக்கிவிட்டு. அனைத்து பள்ளியில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் பணி இடங்களுக்கும் அனைத்து தேர்வர்களுக்கும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு .நடுநிலையோடு சிறப்பாக நடைமுறைக்கு ஏற்றுக் கொண்டு
    அனைத்து தேர்வானவர்களூம் பயன் பெறும் நிலையை உருவாக்கலாம்.














    ReplyDelete
  5. அனைத்து பணி இடங்களூம் ஒரு சேர்ந்து

    நிரப்பினால் நல்லது. ஏனெனில் 50 மார்க்கிற்கு மேலாக எடுத்த சிறப்பு ஆசிரியர்கள் பலரும் கலந்தாய்வுகளில் கலந்து கொள்ள வில்லை.

    ReplyDelete
  6. ha ha..he he..hoo hoo..hey hey..ee ee..inuma neenga avaru solratha nampuringa..

    ReplyDelete
  7. Re-Exam only the solution & Conclusion of this all problems....!

    ReplyDelete
    Replies
    1. Tamil medium & Merritt list problem?
      Why re-exam?
      Ne fail laaaaaaaa!!!!!!!
      Manasatchi erukadhu unnaku night and day padithu pass panavanga nanga muttalla

      Delete
    2. Reexam vechalum neee ellam fail dhan aaga pora pinna yedhuku da andha reexam unaku😂😂😂

      Delete
    3. Our exam eluthi highest mark vaanga evlo kastamnu padichavangaluku theriyum.summa re examnu sollathinga

      Delete
    4. Yogakarare vacha easy exam la pass panna thuppilla ithula innore exama velangidum.....

      Delete
  8. Re exam vacha ivaru state rank vankiruvaru.paithiyakaran.

    ReplyDelete
    Replies
    1. drawing teacher teach drawing for student. ok not for theory class. you know the drawing... trb conduct the drawing exam. somebody pass people no pass this exam...ok... pls hert othets...

      Delete
  9. Innum 2 yeas appointment agumpola. Education minister waste.

    ReplyDelete
  10. Yet paper1 passedcandidate again write pannanuma

    ReplyDelete
  11. கடந்த இரண்டு மாத காலமாக 1:2 என்ற முறையில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியீடு செய்யப்பட்ட உத்தேச தெரிவுப் பட்டியலில் நிலவிவந்த குறைபாடுகளை எண்ணி மிகவும் மனவுலைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணிக்கு முறையான தமிழ் வழி சான்றிதழ் பற்றி தகவல் எதுவும் இல்லை இந்நிலையில் தன்னைவிட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.போன்ற பல்வேறு வகையான குழப்பங்கள் இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய
    த்திடம் தேர்வர்கள் தங்கள் குறைகளை 300 க்கும் மேற்பட்டோர் மனுக்களை நேரில் சென்று கொடுத்த நிலையிலும் இதுவரை தீர்வு காணப்படாத நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே அறிவித்தது போல் சிறப்பாசிரியர் நியமனத்தில் குறைகளை சுட்டிக் காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.என்ற வாக்குறுதிக்கினங்கி தற்போது சிரபப்பாசிரியர் பட்டியலில் நிலவிவரும் தொடர் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது அனைத்து தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மேலும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக பட்டியல் வெளியீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் RESERVED என்று நிறப்பாமல் உள்ள நிலையில் உள்ள அனைத்தையும் கருத்தில் கொண்டு தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு பட்டியல் வெளியீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொல்ள வேண்டும்.பள்ளிகல்வித்துறையின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அண்டை மாநிலங்கள் வியக்கும்படி அமைந்துள்ளது.ஆகவே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இந்த சிரப்பாசிறியர் பணி நியமன விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடப்பு ஆண்டு வரை உள்ள அணைத்து சிரபாசிரியர் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பி தமிழக பள்ளி கல்வி துறையில் எல்லோரும் வியக்கும்படி தன் பொற்கரங்களால் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.மேலும் தமிழக அரசின் கல்வித்துறையின் மூலமாக வழங்கப்படும் சேவைகள் மகத்தானவை மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் K.P.அன்பழகன் நேற்றைய தினம் தர்மபுரியில் கூறியது போல மாணவர்கள் நலன் கருதி வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தி சர்கார் போன்ற எத்தனை திரைப்படம் வந்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்று பேசியது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  12. Sengottai agarathil viravil endran sumar 2000 years endru artham

    ReplyDelete
  13. PG TRB Chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  14. டெட் முதல் பாலிடெக்னிக் வரை அலசிப் பாருங்கள். Weightage வேண்டாம் எனக் கூறுபவர்களையும், reexam வேண்டுபவர்களையும் துச்சமாக நினைத்து. அரசு நம் பக்கம் இருக்கும் என்ற தைரியத்தில் பாஸ் செய்தவர்கள் இருக்க வேண்டாம். அதிக பேர் கேட்கிறார்கள், மீடியாவும் அதையே கூறுகிறது என்கிற ரீதியில், இந்த அரசு முடிவு எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்பது உண்மை.அதைக் காரணம் காட்டி மறதேர்வு கேட்பவர்கள் cm cell petition, newspaper, tv என அவர்கள் வேலையைக் காட்டிக்கொணடே இருப்பார்கள். டெட் பாலிடெக்னிக் விவகாரம் இரண்டுமே, செய்தித்தாள்களால் வந்த வினையே என்பது புரிந்தால், சிறப்பாசிரியர்களில் தேர்வானவர்கள் தங்கள் பக்க நியாயங்களையும் உடனுக்குடன் எடுத்து வைத்துக் கொண்டே இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....

      Delete
  15. நீண்ட கால தாமதம் தேர்வு நடத்தி 15 மாதங்கள் கடந்த நிலையில் இன்று வரையிலும் தீர்வு காணப்படாத நிலையில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.ஒவ்வொருவருக்கும் சராசரியாக பத்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பணி காலம் கிடைப்பதே அரிதான ஒன்றாகும்.இந்நிலையில் பல்வேறு வகையான குழப்பங்கள் உள்ளன இதை தயவுசெய்து மீண்டும் பரிசீலனை செய்து காலதாமதமின்றி தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்வு எழுதியவர்களின் கருத்தாகும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி