பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2018

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் !


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கானதேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர்பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing highergreade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ்வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லைஎன்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வுவாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.

எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்ததேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோருவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்தமுறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.

31 comments:

  1. உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அவர்கள் இத்தகைய காலம் எடுத்து கொள்ளவில்லை. அவர்கள் குறுக்கு வழியை சரியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக மட்டும். Sc 51+5=56 கலப்பு திருமணம் .அரசுஆசிரியா பயிற்சியில் முதல் மாணவன்.கலந்தாய்வில் பெயர் வரவில்லை. 32 மார்க்கிற்கு உனக்கு
    என்ன கலந்தாய்வு எதுக்கு தேர்வு
    அனைத்தும் பித்தலாட்டம்.இதற்கு ஒரே தீர்வு மாற்றம் .இல்லையெனில்
    தூக்கி எரிய வேண்டும். இவர்களால் நல்ல கல்வி .கலை கிடைப்பது வீழ்ச்சியே . காசு இருந்தால் மட்டுமே வாழமுடியும்.வழி கிடைக்கும்.

    ReplyDelete
  2. உண்மை செய்திகளை உடனுக்குடன் உலகறியச் செய்யும் கல்விச் செய்தி ஊடகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது தேர்வர்களின் ஒற்றுமொத்த கருத்தல்ல...trbயின் செயல்பாடுகளை சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்களின் கருத்து...தயவுசெய்து trbயின் இரண்டாவது அறிவிப்பானையை நன்கு படித்து தெரிந்தது கொள்ளவும்.....

      Delete
  3. பதிவு செய்ய வேண்டிய இடம் இதுவல்ல நண்பர்களே.....

    ReplyDelete
  4. PG TRB தமிழ் coatching
    Contact : 9043344502

    ReplyDelete
  5. அறிவிப்பு ஆணையில் பின்னடைவு பணியிடம் என்று கூறி இருந்ததே அதற்கு என்ன அர்த்தம் என்று நக்கீர ர் ராஜ்குமாருக்குத் தெரியாதா...உங்களுக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது.அதானே... அப்பப்பா எத்தனை வழக்கு எத்தனை குற்றச்சாட்டு...இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் சார் 1000பேர் பிழைக்கட்டும்......

    ReplyDelete
  6. Nanthan petition koduthen endru sollum mr.rajkumar en tharpodhu sirappasiriyargalin sarbaga endru pathivittullar.bayanthu kolayagi vittaro.

    ReplyDelete
  7. Intha newslayum rajkumarnu name poda vendiyathu thane looosu paiya.

    ReplyDelete
  8. இந்த செய்தி தந்தது தேர்வாளர்கள் இல்லை...மற்றும் அமைச்சர் சொன்னது ஓய்வு பெற்ற அலுவலர் இல்லை..பணியிடை செய்யப்பட்டவர்..அவர் தான் திருவாளர் ராஜகுமாரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றாக மீண்டும் படித்து பாருங்கள் ஓவ்வு பெற்ற அலுவலர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

      Delete
    2. தந்தி பேப்பரை பாருங்கள்

      Delete
  9. Ithu varai thantha anaithu seithiyum Rajkumar thanthathu.thervargal illai.

    ReplyDelete
  10. 630 examiners given appeal letter to trb.....what is the answer from trb regarding all departments ......

    ReplyDelete
  11. ஆயிரம் பேர் மட்டுமே பிழைத்தால் போதுமா? ஆயிரம் பேர்களுக்கு மட்டுமா தேர்வு நடத்தப்பட்டதா மீதுள்ள RESERVED என்று குறிப்பிட்டு நிறுத்தி வைத்துள்ள தேர்வர்கள் நிலை என்ன ஆவது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது நியாயமாகுமா? சிந்தித்து பாருங்கள் சிறப்பாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் ராஜ் குமார் அவர்கள் யாருக்காக குரல் கொடுத்து வருகிறார். அனைத்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் புரக்கணிப்பு நடந்திருப்பதைத்தானே அவர் மாநில தலைவர் என்ற முறையில் சுட்டிக் காட்டியுள்ளளார்.இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மேலும் இன்றைய சூழ்நிலையில் அவரைத் தவிர யாரும் ஆதாரத்தோடு சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக் காட்ட முடியாது.ஏன் ஜாக்டோ ஜியோ கூட பேச முடியாது. ஏதோ பட்டியலில் இடம் பெற்று விட்டோம் இனி யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல.சட்டம் என்று ஒன்று உள்ளது. சட்டம் எல்லோர்க்கும் பொதுவானது.பிறர் இஷ்டம் போல் இங்கே வழையாதது. என்ற கூற்றுக்கு இணங்கி ஒவ்வொரு வரும் பல்வேறுவிதமான இண்ணல்கள் அனுபவித்துக்கொண்டு போட்டி தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று பட்டியலில் உள்ள குற்றச்சாட்டை அவர் தெளிவாக எடுத்துக் காட்டுவது தலைவருடைய கடமை அதை அவர் மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுவது பாராட்டுக்குரியது.இது தனி நபர் பதிவு அல்ல அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் பணிவான வேண்டுகோள். அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத ஒரு விஷயத்தை காரணமாக காட்டி தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் புறக்கணித்து இருப்பது நியாயமாகுமா? எண்ணிப்பாருங்கள் எந்த அரசு அலுவலராவது சான்றிதழ் சரிபார்ப்பு அன்று நம்மிடம் Free hand outline model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் வேண்டும் என்று கேட்டார்களா? மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தயவுசெய்து பதிவை இடுங்கள் ஏற்றுக் கொள்ளலாம். தயவு செய்து அனைத்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய முன் வரும் சூழ்நிலையில் பட்டியலில் தகுதிவாய்ந்த நபர்கள் கவலையையும் வேண்டாம்.என்பதே RESERVED என்று நிரப்பாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல் பட்டு வருகின்றது.இதற்காக யார் தட்டிக்கேட்பது. சற்று சிந்தித்துப் பாருங்கள் நன்பர்களே இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் வெளிப்படை தன்மையோடு செயல்பட முன்வர தயங்குகிறது.மடியிலே கணமில்லையென்றால் வழியிலே பயமெதற்கு என்ற கூற்றுக்கு இணங்கி ஒவ்வொரு தேர்வர்களும் தாங்கள் எழுதிய விடைத்தாள்களை பத்திரப்படுத்திதானே வைத்துள்ளார்கள். அனைத்து சான்றிதழ்களும்தானே வைத்துள்ளார்கள்.மறுபரிசீலனை செய்வதில் என்ன தவறு தயவு செய்து தர்மத்தை நிலைநாட்டுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த தேர்வையே அதாவது சிறப்பாசிரியார் தேர்வையே அரசு ரத்து செய்தால் ராஜ்குமார் என்ன
      செய்திருப்பார்....?

      Delete
    2. பொருத்திருந்து பார்ப்போம் யூகத்திற்தகெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்ற நிலை கிடையாது.

      Delete
  12. PG TRB Chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  13. எத்தனை முறை வேண்டுமானாலும் சான்றிதழ் சரி பார்த்துக் கொள்ளட்டும் ஏன் Re Exam என்று சொல்கிறார் இது முற்றிலும் தவறு இன்று வரை உள்ள காலி இடங்களை நிரப்ப போராடுங்கள் யார் தடுப்பது மறு தேர்வு என்றால் வார்த்தை ஏன்?என்பது தான் கேள்வி

    ReplyDelete
  14. மறு தேர்வு என்று புலம்புவது தோல்வி அடைந்தவர்கள்களின் புலம்பல்கள் அதை தலைவர் ஒருபோதும் மு்ன் மொழிய வில்லை அவர் கேட்பதெல்லாம் வெளிப்படைத்தன்மை மட்டுமே ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட லாம் ஒரு நிரபராதி கூட பாதித்து விடக்கூடாது என்பதே கலையாசிரியர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ் குமார் அவர்கள் கருத்து. இதுவரை ஆதாரமில்லாத எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்ததில்லை.ஆரபம்பத்திலிருந்தே அவர் ஒருவராவது தட்டிக்கேட்க இருப்பது நல்லது.

    ReplyDelete
  15. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை...
    ஆனால் TRB முதன் முறையாக சிறப்பாசிரியர் தேர்வினை நடத்தியதால் சில குழப்பங்கள் உள்ளன....அதை சரி செய்தாலே போதும்......நேர்மையான,உண்மையான,அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் பயனடைவார்கள்.....
    TRB யும் அதன் நேர்மையை நிலைநாட்டலாம்....

    ReplyDelete
  16. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை...
    ஆனால் TRB முதன் முறையாக சிறப்பாசிரியர் தேர்வினை நடத்தியதால் சில குழப்பங்கள் உள்ளன....அதை சரி செய்தாலே போதும்......நேர்மையான,உண்மையான,அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் பயனடைவார்கள்.....
    TRB யும் அதன் நேர்மையை நிலைநாட்டலாம்....

    ReplyDelete
    Replies
    1. அறிவிக்கப்பட்டது 1325 பட்டியலில் இடம் பெற்றுள்ள வர்கள் 1080 பேர் தகுதிவாய்ந்த பட்டியலில் இடம்பெறாமல் அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று பட்டியலில் இடம் பெறாமல் காத்திருக்கும் தேர்வர்களுக்கு பட்டியலில் உள்ளவர்களின் கருத்து என்ன என்பதை உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ள அன்பு நன்பர்கள் பதிவுகளை தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் ஏற்புடைய கருத்தாக இருந்தால் தயவுசெய்து பதிவுஇடுங்கள்.கருத்துக்களை கருத்துக்களால் வெல்லலாம்.

      Delete
  17. அரசின் முடிவு தெரியும் வரை அனைத்து பணிஇடங்களையும் திருத்தப்பட்ட பட்டியல் தயாரிக்கும் வரை பொருமை காப்பது தான் சரியானது.இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வில்லை. ஆக்கப்பொருத்ததை ஆரப்பொருப்பதே நல்லது.இத்தனை பிரச்சினைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு புரிய வைக்கவே இரண்டு மாத காலம் தேவைப்படுகிறது.இனிமேல்தான் நாளையதினம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இது சம்பந்தமாக பேசி முடிவு எடுக்க முனைகிறார்.அவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் தேர்வர்களின் சார்பாகவும் நாம் வாழ்ந்து சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பொருத்திருந்து பார்ப்போம் .! விரைந்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  18. Hi,friends,


    I m from karur, Government nadathana SPECIAL TRB Examla Drawing, Music, Sewing, endru anaithu pirivilum, saanrithal sari paarpil,TTC certificate iruntha thaaaaaaa, Drawing teachers ku Aarasu velainu,intha Government rules potruku,k. Aaaaana 2007 ku apro Free hand outline and model drawing,course mattu nadathittu, TTC(3months course) nadathama vittathu intha Arasaangamthaane nga.


    Nanbarkale Thayavu seithu itha parinthuraiya Neethi mandrathu eduthu sollunga,



    Ithuvum naaayamana korikkaithaane?,




    Oru mukkiya poruppula irukavanga,anaithu tharappulaum irunthu nalla,oru Nayamana Theervai sollanumthaaanunga, so please share nga

    ReplyDelete
    Replies
    1. தயவுசெய்து பதிவை தமிழ் மொழியில் பதிவு செய்யுங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

      Delete
  19. Ithe, kalviseithi website ku palamurai nan enathu korikkaiyai ulakariya seyya korikkai vaithen,aaanalum entha oru supportum panavillai ithe kalviseithi network, ivingakooda kanduklaye, aana sei panrenu solranglenu yoche, but saatharana manithanala ivingala onnu sollamudiyathla,

    ReplyDelete
  20. Respected Admin of kalviseithi,Atleast publish this request after read this comment.Because most of the candidates were attended CV But They mentioned INELIGIBLE.


    PLease help us to shere and get good judgment on our request.please sir,please,




    Ella nanbarkaltaum, thalmaiudan sollikre,ithumaari TTC ilama Ineligible iruntheengana,or ungaluku therinjavanga irunthangana,contact panunga,9976734791,


    Thaalmaiyana murail,arasidam Namadhu korikkaiyai solluvom,


    Atleaste aduthamurai,Naam Eligible endravathu angikaripaarkal alava so please convey this request to the, Government or court,

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை தமிழ் மொழியில் பதிவு செய்ய வேண்டுகிறோம்

      Delete
  21. govt.a kaapathave time illa.... job vendam?? ? job.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி